பக்கம்:வேத வித்து.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனபாடிகள் எதுவும் சொல்லவில்லை. 'உள்ளே போய் சுவாமிக்கு முன்னால் வைத்து கமஸ்காரம் புனனுடா. உன் தாயார் போட்டுக் கொண்டிருந்த சங்கிலி என்று உன் அப்பா சொல்லியிருக்கார். கல்ல சொத்து. நான் வரட்டுமா! பாகீரதி யைக் கூப்பிடு' என்றார். . பாகீரதி வந்து கின்றாள், “பாடசாலையைப் பார்த் துக்கோம்மா. காலே காளில் திரும்பி வந்துடறேன். உனக்குத் துணையா முனியம்மாவை ராத்திரிலே வந்து படுத்துக்கச் சொல்லு. அநேகமா இன்னைக்கு கொண்டி கிட்டா ஒருதலும் வந்துடுவான். ஜாக்கிரதை, ஜாக்கிரதை' என்று சொல்லிக் கொண்டு புறப்பட்டார். . - ЧТшzzaars கூடிய பலமான சாப்பாடு ஆனதால், பாடசாலைப் பிள்ளைகள் உண்ட மயக்கத்தில் முலைக்கு ஒருவராய் உறங்கிக் கொண்டிருந்தார்கள். வாசலில் கல்சட்டி வியாபாரி கட்டைக் குரலில் கூவிக் கொண்டிருந்தான். தோட்டப் பக்கம் கிணற்றடியில் வேலைக்காரி முனியம்மா துணியை அறைந்து துவைக்கும் ஓசை - "மூர்த்தி வறயாட்ா, பல்லாங்குழி ஒரு ஆட்டம் போடலாம். பின்கட்டுப் பக்கம் வா. அங்கே முற்றத்தில் அரிசி வடாம் உலர்த்தியிருக்கேன். காக்கா வராமல் பார்த்துக்கலாம்' என்று கூப்பிட்டாள் பாகீரதி, - 'துர்க்கம் வரலையா உனக்கு? பாவம், ஓயாம வேலை செய்யறயேl' +. - . "பரவாயில்லடா, பல்லாங்குழி ஆடி ரொம்ப நாளாச்சு. அப்பாகூட இல்லை. வா, வந்து உட்கார்" என்றாள் பாகீரதி என்றைக்குமில்லாத உற்சாகம் தெரிந்தது அவள் குரலில் கனபாடிகளின் கண்டிப்பான கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்ற உற்சாகம்! - 1 * - சோப்பினால் முகம் கழுவி, தலைவாரி கோடாலி முடிச்சுப் போட்டிருந்தாள். வெறிச்சோடியிருந்த அவள் நெற்றியில் மூர்த்தி மானசீகமாய் ஒரு குங்குமப் பொட்டு வைத்து அழகு பார்த்தான்!

24

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/26&oldid=1281560" இலிருந்து மீள்விக்கப்பட்டது