பக்கம்:வேத வித்து.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுப்பினார். பாகீரதியைத் தனியா விட்டுட்டு வந்துட்டேன். நீ போய் கான் வர வரைக்கும் அவளுக்குத் துணையா இருந்து கவனிச்சுக்கோ. முனியம்மாவை வந்து துணைக்குப் படுத்துக்கச் சொன்னேன். வராளோ, இல்லையோ - கவலையாயிருக்கு' என்று.' 'உன் ஆத்துக்காரர் வரலையா?" 'கோர்ட்ல கேஸ் இருக்காம். நீ மட்டும் போயிட்டு வான்னுட்டார். என்ன வக்கீல் வேலை வேண்டியிருக்கு?" "உன் மாமியார் காஞ்சீபுரத்தில்தானே இருக்கா?' "ஆமாம்; வேலூரிலேருந்து என் காத்தனார் வேற வந்திருக்கா. எனக்கும் உன்னைப் பார்க்கணும்போல இருந்தது. ஓடி வந்துட்டேன்.' 'அப்பா வர இன்னும் நாலு நாள் ஆகுமா?' என்று பாகீரதி கவலைப்படுவதுபோல் பாசாங்காய்க் கேட்டபோதிலும் உள் மனம் கிம்மதியாக 'அம்மாடி!' என்றது. குழந்தை அம்புலு சிணுங்கிக் கொண்டிருந்தது. 'அம்புலுவைக் கொடு இப்படி. பசி போல இருக்கு, பாவம், குழந்தைக்கு. (அம்புலுக்கண்ணு ஒடியாl) பசும்பால் காய்ச்சி வச்சிருக்கேன். கிண்டிகூட இங்கதான் இருக்கு. போனதடவை நீ இங்க வந்திருந்தப்போ மறந்துட்டுப் போயிட் 'என்னடி உன் கண்ணெல்லாம் இப்படி சிவந்திருக்கு' ' உரலில் மிளகாய்ப்பொடி இடிச்சேன். கண்ணிலே பட்டுட்டுது. எரிச்சல் தாங்கலை...' 'அவன் எங்கடி?' கமலாவின் கண்கள் விட்டைத் தருவின. "எவன்? யாரைக் கேட்கிறே' - 'மூர்த்தியைத்தான்...' 'கார்த்தாலே போனவன்தான். இதோ குளிச்சுட்டு வந்துடறேன்னு போனான். மணி பத்தாகப் போறது. இன்னும்

35

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/37&oldid=1281571" இலிருந்து மீள்விக்கப்பட்டது