பக்கம்:வேத வித்து.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணல்லே. அப்பா இல்லையோன்னோ? பூஜையும் இல்லே. இஷ்டம்போல வருவான்.' 'ஆத்தங்கரைக்கு யாரையாவது அனுப்பி தேடிப் பாக்கறது தானே?" 'அனுப்பாம இருப்பனா? குண்டு பட்டாபி போய்ப் பார்த்தானாம். அங்கே வரவேயில்லைன்னு அாசசகா சொல் விட்டாராம். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு, கமலா!...' 'வந்துருவான். கவலைப்படாதே. பசங்க சாப்டாச்சா?' "சமையலே இனிமேத்தான் ஆரம்பிக்கணும். காலம்பற பழையது சாப்பிட்டா...' கமலா வீடு முழுதும் ஒரு முறை சுற்றி வந்து கண்ணோட்ட மிட்டாள். தோட்ட்ப் பக்கம் போய் பசுமாடுகளைத் தடவிக் கொடுத்துவிட்டு வந்தாள். முற்றத்தில் மஞ்சள் மஞ்சளாய் வேப்பம் பழங்கள் உதிர்ந்து கிட்ந்தன. 'ஏண்டி இதெல்லாம் பெருக்கி சுத்தப்படுத்தக் கூடாதோ? முனியம்மா வரலையா?" என்று கேட்டுக்கொண்டே தாழ்வாரத் தில்:-ராத்திரி மூர்த்தி படுத்திருந்த இடத்துக்கு வந்தாள். சுவர் ஒரமாக அவன் படுத்திருந்த பாயும் தலையணையும் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. படுக்கைக்கு அருகில் வாடி வதங்கிய மல்லிகைப்பூக்கள் பழுப்பு நிறத்தில் சிதறிக் கிடந்தன. "பூவெல்லாம் இங்கே ஏன் விழுந்து கிடக்கிறது?" என்று கேட்டாள் கமலா. - • "கூடத்துலே லட்சுமி படத்துக்கு வச்சிருக்தேன். இந்தக் இருவிகள் அடிக்கிற லூட்டி சகிக்கில்ே, அதுகள் கொண்டு வந்து போட்டதோ என்னவோ? வீடு பூரா குப்பை பண்ணிண்டு." என்று சமாளித்தாள் பாகீரதி, "இன்னும் நீ குளிக்கலையா?" 'காலம்பறவே குளிச்சுட்டேன்...'

36

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/38&oldid=1281572" இலிருந்து மீள்விக்கப்பட்டது