பக்கம்:வேத வித்து.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பிராமணப் பிள்ளையா? "ஆமாம்; வேதம் படிக்கிறார்!...” "'உங்க மகதான் என்னைக் காப்பாத்தினார். அன்னைக்கு என் உயிரைக் காப்பாத்தினா. இன்னைக்கு என் மணிபர்ஸைக் காப்பாத்தினா!' என்றான் மூர்த்தி. 'மழை நின்னுட்டுது. வாங்க சத்திரத்துக்குப் போவோம்' என்றான் கிழவன். "இடியும் மின்னலும் நின்னபாடில்லை. மறுபடியும் மழை வரும் போலிருக்கு' என்றான் மூர்த்தி. சத்திரத்துத் தாழ்வாரத்தின் ஒரு மூலையில் ஏற்கனவே இடம் பிடித்து வைத்திருந்தாள் மஞ்சு. அங்கேதான் சமையல் சாப்பாடு படுக்கை எல்லாம். மஞ்சு அடுப்பு பற்ற வைத்து சப்பாத்தி தயாரித்தாள். 'சப்பாத்தி பிடிக்குமா உனக்கு?' மூர்த்தியைக் கேட்டாள். 'இல்லே, கான் ஆனந்தா லாட்ஜுக்குப் போறேன்.' "ஏன் நான் செய்யற சப்பாத்தி பிடிக்காதா?" 'உன்னைப் பிடிச்சிருக்கு!' சிரித்தாள். அவள் அவனிடம் இந்த வார்த்தையை எதிர் பார்க்கவில்லை. போயிட்டு சிக்கிரம் வந்தடுவே இல்ல?" 'உடனே... இனிமே உன் கூடத்தான்.' "ஏன் வேதம் படிக்கப் போறதில்லையா?' 'நீ என்னைத் தொட்டு காப்பாத்தினதிலேர்ந்து என் மனசே சரியில்லே. பாடசாலையிலும் அமைதி இல்லாமப் போயிடுத்து. புத்தி வேதத்தில் லயிக்கலே. சரியோ தப்போ, துணிஞ்சு வந்துட்டேன்."

58

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/60&oldid=1281594" இலிருந்து மீள்விக்கப்பட்டது