பக்கம்:வேத வித்து.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உனக்கும் உன் அப்பாவுக்கும் ஆட்சேபனை இல்லேன்னா நானும் உங்களோடு சேர்ந்து கழைக்கூத்து ஆடத் தயார். எனக்கு வித்தையெல்லாம் கத்துக் கொடுப்பியா?" 'கிசமாத்தான் சொல்றயா?" "நிஜம்ம்மா!' மின்னல் ஒன்று வெள்ளிக் கொடியாய்ப் பளிச்சிட்டது. மஞ்ச யோசித்தாள். அப்பாவுக்குப் பிறகு தனக்குப் பாதுகாப்பாக ஒரு ஆண் துணை தேவை என்பதையும் தனக்கு ஏற்றவனாக யார் கிடைக்கப் போகிறான் என்பது பற்றியும் அவள் கொஞ்ச நாட்களாகவே யோசித்துக் கொண்டுதா னிருந்தாள். மூர்த்தி அதற்குப் பொருத்தமானவனாயிருப்பான் என்று ஒரு எண்ணம் மின்னலிட்டது அவளுக்கு. "வேதத்தைப் பாதியில விட்டு வந்த மாதிரி இங்கிருந்தும் போயிடமாட்டயே!' - வானத்தில் ஒரு பலத்த இடி முழங்கியது. 'ஊஹல்ம், மாட்டேன்.' "உன்னை யாரும் தேடி வரமாட்டாங்களா?' வந்தாலும் போகமாட்டேன். எனக்கு அம்மா இல்லை. அப்பா ரிஷிகேசம் போயிட்டார். வேதம் சொல்லித் தரும் சங்கர கனபாடிகள்தான் என் தாய் தங்தை, குரு, தெய்வம் எல்லாம். என்னை மறந் துடுங்க; தேட வேண்டாம்னு அவருக்கு கான் கடிதம் எழுதிப் போட்டுட்டேன். அவர் என்னைத் தேட் மாட்டார். இதைச் சொல்லும்போது அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கூடல்வாயில் மழைத் தண்ணிர் அருவியாய் கொட்டியது. 'அப்ப... அவரிடம் சொல்லிக்காம வந்துட்டியa' "ஆமாம்.' ஏன்?"

59

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/61&oldid=1281595" இலிருந்து மீள்விக்கப்பட்டது