பக்கம்:வேத வித்து.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழக்கமில்லாத சூழ்நிலையில் தூக்கம் வரவில்லை அவ னுக்கு. அடங்கியிருந்த மழை கடு கிசிக்கு மேல் மீண்டும் கொட்டத் தொடங்கியது. மழைச்சாரல் தாழ்வாரத்தை நனைத்ததுடன் மூர்த்தி கால்களையும் ஈரமாக்கியது. அவன் நகர்ந்து போய்ச் சுவரோரம் முடங்கிக் கொண்டான். - மஞ்சு சப்தப்படுத்தாமல் எழுந்து கின்று மூர்த்தி எப்படி இருக்கிறான்?' என்று பார்த்தாள். குளிரில் கடுங்கிக் கொண் டிருந்தான். 'பாவம், குளிருதா மூர்த்தி?' என்று கேட்டுக் கொண்டே கனமான போர்வை ஒன்றை எடுத்து அவன் மீது போர்த்தி விட்டாள். இ.ை பாடசாலையில், அதே நேரம் கனபாடிகள் மூர்த்தியைப் பற்றிய விசாரத்தில் மூழ்கியவராய் தூக்கம் வராமல், "மூர்த்தி முர்த்தி!' என்று பித்துப் பிடித்தவர் போல் முனகிக் கொண்டிருந்தார். * துரங்கிக் கொண்டிருந்த கொண்டி கிட்டாவை எழுப்பி, 'ஏண்டா கிட்டா இந்த மழை தஞ்சாவூர் பக்கமெல்லாம்கூடப் பெய்யுமோ?' என்று கேட்டார். தூக்கக் கலக்கத்தில் அவனுக்கு ஒன்றும் புரியாமல், 'இப்ப இங்கே மழை பெய்யறதா?' என்று கேட்டான். 'முர்த்தி இந்த மழையில எங்கே கிடந்து கஷ்டப் படுகிறானோ? போர்வைகூட இல்லாமப் போயிருக்கானே! அவ னுக்கு யார் போர்த்திவிடப் போறா?' என்று கனபாடிகள் தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருந்தார். கூடத்தில் அம்புலு சிணுங்கிக் கொண்டிருந்தது. பாகீரதிக்கும் தூக்கம் பிடிக்கவில்லை. அந்த முதல் இரவு' கினைவுகள் அவளை வாட்டி எடுக்க, ப்ொங்கி வந்த கண்ணிரால் நினைவுகளைக் கழுவிக்கொண்டு, முன்கட்டுப் பக்கம் போனாள். கனபாடிகள் படுக்கையில் எழுந்து உட்கார்க் திருந்தார். 'என்னப்பா, துரங்கலையா நீங்க?" “g ஏன் தூங்கலை? உனக்கு ஏன் தூக்கம் வரலை?" என்று பதிலுக்குக் கேட்டார் கனபாடிகள்.

62

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/64&oldid=1281598" இலிருந்து மீள்விக்கப்பட்டது