பக்கம்:வேத வித்து.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெமல் முந்திரிப்பருப்பு வறுபட்டுக் கொண்டிருந்த மணம் பாடசாலை முழுதும் கமகம'த்தது. வெள்ளிக்கிழமை யானதால் சுவாமி நைவேத்தியத்துக்கு அவல் பாயசம்' கனபாடிகளும் கிட்டாவும் பசு மாட்டுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டுக் கொண்டிருந்தார்கள். - பத்து நாட்களுக்குமுன் கொட்டிலுக்குப் புது வரவு' ஒன்று சேர்ந்திருந்தது. காவேரிப்பாக்கம் பசு ஈன்றெடுத்த அந்த ஆண் கன்றுக்கு இன்று நாமகரணம்! உடல் முழுக்க, பட்டை பட்டையாக, திட்டுத்திட்டாக, வெள்ளையும் பழுப்பும் கலந்த வெல்வெட் வழவழப்பில் அந்த சேங்கன்று துள்ளிக் கொண்டிருந்தது. 'அடே கிட்டா ! இதுக்கு என்ன பேர் வைக்கலாம் சொல்லு! கமலாவையும் பாகீரதியையும் கூப்பிடு. அவாளையும் கேட்போம்' என்றார் சுனபாடிகள். அவர்கள் வந்தார்கள். ராஜான்னு வைக்கலாம்ப்பா' என்றாள் கமலா. "ஸ்வாமி பேர் எதுவும் தோணலையா? நீ என்ன சொல்றே பாகீ?" -

63

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/65&oldid=1281599" இலிருந்து மீள்விக்கப்பட்டது