பக்கம்:வேத வித்து.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏதும் சொல்லத் தெரியாதவள் போல் மெளனமாய் கின்றாள். அவள். - "கம்ப மூர்த்தி ஞாபகமாக அவன் பேரையே வெச்சுட லாமே!" என்றான் கிட்டன. கனபாடிகள் முகத்தில் ஒரு பிரகாசம் பளிச்சிட்டது. "சரி; அந்தப் பேரையே வச்சுடுவோம். எனக்கு ரொம்ப திருப்தி. பாகீ உனக்கு?" - "அவளுக்கும் பரம திருப்திதான். எனக்குத் தெரியும்' என்றான் கிட்டா. - "உனக்கெப்படிடா தெரியும்?" 'கன்னுக்குட்டிக்கு மூர்த்தி பேரை வைக்கலாம்னு கேத்தே அவள் எங்கிட்ட சொல்லிட்டாளே!” "ஓகோ, ஏற்கனவே தீர்மானம் ஆயிட்டுதோ!' என்றார் கனபாடிகள். கிட்டா எங்கேயோ ஒடிப்போய் கன்றுக் குட் டி க் கு க் தர பசும்புல் கொண்டு வந்தான். "இதை உன் கையாலேயே கொடுடா! உனக்கு ரொம்பப் புண்ணியம்' என்றார் கனபாடிகள். சேங்கன்று அண்தை ஆவலாய்ச். சாப்பிட்டது. 'நம்ப மூர்த்தி இப்போ எங்கே இருக்கானோ? யார் அவனுக்கு சாதம் போடறாளோ?' என்று கனபாடிகள் துக்கப் பட்டார். இச்சமயம், பாடசாலைப் பையன் ஒருவன் ஓடி வந்து, "உங்களைப் பார்க்க வாசல்லே யாரோ கும்பலா வந்திருக்கா. பக்கத்து அக்கிரகாரமாம்!' என்றான். 'திண்ணையில உட்காரச் சொல்லு, இதோ வந்துட்டேன். முதல்ல எல்லோருக்கும் மோர் கொண்டு போய்க் கொடு' என்றார்.

64

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/66&oldid=1281600" இலிருந்து மீள்விக்கப்பட்டது