பக்கம்:வேத வித்து.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கெட்டழிஞ்சு வ ந் தி ரு க் கா ன். யாரோ மலாய்க் காரியைக் கல்யாணம் பண்ணிண்டானாம். அவளும் போயிட் டாளாம். நிறையப் பணம் காசோட வந்திருக்கான், மறுபடியும் பார்வதியோட சேர்ந்து வாழப் போறேங்கறான்...'

பார்வதி என்ன சொல்றா?" "ஊர் ஒத்துக்குமா'ன்னு கேட்கிறா.' 'நீங்கள்ளாம் என்ன நினைக்கிறேள்?"

அக்கிரகாரத்துல முக்கியமான வாளெல்லாம் கூடிப் பேசி னோம். சில பேர் சேர்த்துக்கலாம்னு அபிப்ராயப்படறா. சில பேர் கூடாதுங்கறா. கடல் கடந்து போனவனை, அதுவும் இருபது வருஷம் கழிச்சு வந்திருக்கவனை எப்படி சேர்த்துக்க முடியும்? மாமிசம்கூடச் சாப்பிட்டிருப்பான். ஜாதிப் பிரதிஷ்டம் ப்ண் ற்தைத் தவிர வேற வழி இல்லேங்கறா. இப்ப அக்கிரா கரம் ரெண்டு கட்சியாப் பிரிஞ்சு நிக்கறது. அதான் உங்களைக் கேட்டு முடிவு பண்ணலாம்னு ரெண்டு கட்சிக்காராளும் சேர்ந்து வந்திருக்கோம்.' "நான் சொல்ற தீர்ப்பை ஏத்துக்க வந்திருக்கேளா, இல்லே, சாஸ்திரம் என்ன சொல்றதுன்னு தெரிஞ்சுண்டு போக வந்திருக்கேளா?" ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். "கனபாடிகள் சொல்ற முடிவை ஏத்துக்கலாம்னுதான் வந்திருக்கோம்.' "கடல் கடந்து போனவனுக்கு, அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கான். ஜாதிவிட்டு 繁 கல்யாணம் 鄂 புண்ணிண்டிருக்கான். இதுக்கு பிராயச் சித்தமே கிடையாது. சில பாவங்களுக்குத்தான் பிராயச்சித்தம் உண்டு. இப்படிப் பட்டிஆாளுக்கு சமூகத்துல அங்கீகாரம் கிடையாதுன்னுதான் சாஸ்திரம் சொல்றது. அதுதான் என் தீர்ப்பும்' என்றார் கனபாடிகள. "ஆப்ப அந்த அம்மா பார்வதியின் வாழ்க்கை சூன்யமாப் போயிட வேண்டியதுதானா?" என்று கேட்டது ஒரு குரல்.

66

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/68&oldid=1281602" இலிருந்து மீள்விக்கப்பட்டது