பக்கம்:வேத வித்து.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சாஸ்திரம் என்ன சொல்றது என்று கேட்டேள். சொன் னேன். என் தீர்ப்பையும் சொன்னேன். அப்புறம் உங்க இஷ்டம்" என்றார் கனபாடிகள். 'கம்ப சமூகம், சமுதாயம் எல்லாம் கல்லபடியா வாழனுங் கறதுக்குத்தானே சாஸ்திரம் சம்பிரதாயமெல்லாம்? இப்படி வாழ்க்கையே அடியோடு ச மா ப் போயிடறதுக்கு ஒரு சாஸ்திரமா? அது நமக்குத் தேவைதானா? அப்படிப்பட்ட சாஸ்திரத்தை மாத்தி அமைக்க வேண்டியதுதானே!" கனபாடிகளுக்குக் கோபம் பொத்துக் கொண்டது. "என்ன சொல்றீங்க நீங்க? சாஸ்திரத்தையே மாத்த ணுங்கறேளா? பேஷ் சாஸ்திரங்கறது. உங்க வீட்டு ஈயப் பாத்திரம்னு கினைப்பா? உங்க இஷ்டம்போல அழிச்சு மாத்த றதுக்கு. அது ஒரு பிரமாணம். யுகம் யுகம்ாய் மாறாமல், மாற்றாமல் இருந்து கொண்டிருக்கிற வேதப் பிரமாணம். சூரியனையும் சந்திரனையும் மாத்தனும்னு சொல்றது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் சாஸ்திரங்களை மாத்தனுங் கறதும். எப்பவோ ஏற்பட்ட சாஸ்திரம் இப்ப நமக்குப் பொருத் தமாயில்லேன்னா, கம்ம இஷ்டத்துக்கு அது வளைஞ்சு கொடுக் கலேன்னா, அதுக்காக மூலத்தையே மாத்திடறதா!' 'ஏன், முடியாதா? கூடாதா?' என்று கேட்டது ஒரு குரல். "ஒரு தேசத்துல கடுமையான வெய்யில் தகிக்கிறது. இன்னொரு தேசத்துல தாங்கமுடியாத குளிர் எடுக்கறது. இந்த இரண்டு இடத்துக்குமே சூரியன் பொதுவானவன். அந்தந்த இடத்துக்குக் தகுந்தரப்பலதான் சூரிய வெப்பம் இருக்கனும், ஆதுக்கு ஏற்ற மாதிரி ஒரு சூரியனைச் சிருஷ்டி பண்ணனும்னு சொன்னா அது எப்படி சாத்தியமில்லையோ, அது மாதிரிதான் சாஸ்திரத்தை மாத்தனுங்கறதும். பூர்வ ஜன்ம பலனை இந்த ஜன்மத்துல அனுபவிக்கிறோம். அது அவரவர்களுடைய பாவ புண்ணியத்துக்கு ஏத்த மாதிரி அமையறது. அதை அனுபவிச்சு தான் தீரனும், சாஸ்திரம் எல்லா யுகங்களுக்கும் பொதுவானது. கால தேச வர்த்தமானத்துக்கு ஏத்த மாதிரி அதை மாத்திண் டிருக்க முடியாது. இது சத்தியம், வேதவாக்கு" என்றார் கனபாடிகள.

67

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/69&oldid=1281603" இலிருந்து மீள்விக்கப்பட்டது