பக்கம்:வேத வித்து.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசை இருக்காதா அலங்காரம் பண்ணிக்க' சாஸ்திர விரோதம்னு தெரியாதா உனக்கு தப்பு கெளரி, ரொம்பத் தப்பு' "அவள் கூந்தலை எடுக்காமல் வைத்திருப்பது உனக்குத் தப்பாத் தெரியலே தலைபின்னிப் பூ வைக்கறது மட்டும் தப்பாக்கும். நீ செய்தது நியாயம்னா நான் இப்ப செஞ்சதிலேயும் தப்பில்லே... அப்படி என்ன செய்துட்டேன். நீ செஞ்சதுக்கு மேல ஒரு படி போயிருக்கேன். அவ்வளவுதானே!" பதில் சொல்ல முடியாமல் திணறிப்போன கனபாடிகள் "ராம, ராமா!' என்று முணுமுணுத்தபடி அப்பால் போய் விட்டார். ്. விஷயமாக வாத்தியாரைத் தேடிப் போன கிட்டா திரும்பி வந்தான். "புதன்கிழமை அவருக்கு வேலை இருக்காம். வர முடியாதாம்' என்றான். - 'பதிலுக்கு வேறு வாத்தியாரை ஏற்பாடு பண்ணிட்டுப் போக வேண்டியதுதானே, நீ கேட்டயா?" "கேட்டேன். அங்கே பக்கத்துார்க்கா ராளெல்லாம் கும்பலா இருந்தா. ஏதோ கசமுசா'ன்னு பேசிக்கறா' என்றான் கிட்டா, என்னடா பேசிக்கிறா?' 'உங்களை பாய்காட்' பண்ணப் போறாளாம்.' 'ஒகோ' என்றார் கனபாடிகள்.

79

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/81&oldid=1281615" இலிருந்து மீள்விக்கப்பட்டது