பக்கம்:வேத வித்து.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுவில் நூற்றுக் கொண்டிருந்த கனபாடிகளின் மனம் தக்ளியில் லயிக்காமல் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்ததால் நூலிழை பட் பட்டென்று அறுபட்டுக் கொண்டிருந்தது. பாய்காட்'னா என்ன பண்ணப் போறாளாம்?' என்று கேட்டாள் கெளரி அம்மாள். "எல்லாருமாச் சேர்ந்து நம் வீட்டு விசேஷங்களுக்கு வராமல் கம்மை ஒதுக்கி வச்சுடுவா. அதுக்குப் பேர்தான் பாய்காட். ஊராருக்கு இங்கிலீஷ்ல தெரிஞ்ச வார்த்தை அது ஒண்னுதான்போல இருக்கு ஹ்ம்...' வருத்தத்தோடு சிரித்தார் கனபாடிகள். "அப்படி என்ன மகாபாவம் பண்ணிட்டயாம் நீ?" 'பாகீரதி கூந்தலை எடுக்காம இருக்காளே, அதுக்குத் தான்...' - "அவாவா வீட்ல இப்படி ஒண்ணு கடந்திருந்தா அப்பத்தான் தெரியும் அந்தக் கஷ்டம். அது சரி; இத்தனை காளும் பேசாம இருந்துட்டு இப்ப என்ன திடீர்னு பாய்காட்?" என்று கேட்டாள் கெளரி. 'கோபத்துக்குக் காரணம் வேற. நான் சொன்ன தீர்ப்பு, சிலபேருக்குப் பிடிக்கலை. இதுக்கு என் பேரில் குரோதம் பாராட்டிப் பழி வாங்க கினைக்கிறது சரியா...'

80

80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/82&oldid=1281616" இலிருந்து மீள்விக்கப்பட்டது