பக்கம்:வேத வித்து.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அந்தக் கடுக்கன் ஆசாமிதான் ரொம்பத் துள்றான்..." என்றான் கிட்டு. "யாருடா அந்த கடுக்கன்? அவனுக்கென்ன அவ்வளவு ஆத்ரம்' 'கேத்து உங்களையே எதிர்த்து கேள்வி கேட்டானே ஒருத்தன், அந்த அயோக்கியன் தான். அவ ன் காசமாப் போயிடுவான்.' "கிட்டாl யாரையும் சபிக்காதே! நீ வேதம் ஒதுகிறவன். சாபம் கொடுத்தா நிஜமாவே பலிச்சிடும்.' "கன்னாப் பலிக்கட்டும்; உங்களை எதிர்த்துப் பேசலாமா அவன்!' "கெளரி எதுக்கும் நாம் முன்னேற்பாடா இருந்துடறது. நல்லது. கடைசி கேரத்துலே நம்மாத்து திவசத்துக்கு யாரும் வராம இருந்தாலும் இருந்துடுவா. அப்புறம் காரியம் கெட்டுப் போயிடும். பித்ருகர்மாக்களை விட்டுட முடியுமா? அதுவும் தாயார் சிராத்தமா ச்சே!' 'கவலைப்படாதே, அண்ணா நாளைக்கே ரெண்டு பேரும் சிதம்பரம் போயிட்டாப் போச்சு!" என்றாள் கெளரி. 'திருவிசகல்லூர் பூரீதர ஐயர்வாள் கதை தெரியுமோ, உனக்கு?' என்று கேட்டார் கனபாடிகள். 'அதென்ன கதை? சொல்லு!' 'அந்தக் காலத்துல நீதர ஐயர்வாள்னு ஒருத்தர். அவர் கதையும் இப்படித்தான். அந்த ஊர் பிராமணாளெல்லாம் சேர்ந்துண்டு அவரை 'பாய்காட்' பண்ண ஆரம்பிச்சா. நீங்க திவசம் பண்றதை ஒரு கை பார்த்துடறோம்’னு ஆவேசமா தடியும் கையுமா அவர் வீட்டைச் சு த் தி நின்னுண்டு திவசத்தன்னைக்கு ஒருத்தரையும் உள்ளே போக விடாமல் தடுத்துட்டா.' "அப்படி என்ன குத்தம் பண்ணிட்டார் அவர்?" 'யாரோ ஒரு ஹரிஜன், ஐயர் வாள் ஆற்று வெள்ளத்தைக் கடந்து போறதுக்கு ஒத்தாசை பண்ணியிருக்கான். அதுக்கு

8i

81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/83&oldid=1281617" இலிருந்து மீள்விக்கப்பட்டது