பக்கம்:வேமனர்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெறுப்பு மிகக் கடுமையாகவும் பிடிவாதமாகவும் இருந்தது. இவ்விடத்தில் அவருடைய விளக்கவுரையை முற்றிலும் மேற்கோளாக காட்டுவது பொருத்தமாகும்.

டாக்டர் போப் என்பார் வேமனரின் எழுத்துகள் தெலுங்கு மக்களிடையே மிகவும் புகழுடன் திகழ்ந்தன என்று குறிப்பிடுகின்றார். அவருடைய செல்வாக்கு முழுவதும் ஆந்திரர்களின் எல்லைக்குள்ளேயே அடங்கிக்கிடந்தது என்பது என் நம்பிக்கை. அவர்களுக்குள்ளேயேயும் இந்து சமயத்தில் உண்மையான நம்பிக்கையுடைய கிறித்தவ சமயம் பரப்பும் துணைக் குரு கோலன்ஸோ என்பாரை எந்த உணர்வுடன் நோக்குகின்றாரோ அதே உணர்வுடன் வேமனரை மதிக்கின்றனர். அரசினர் பள்ளிகளில் வேமனர் முதன்முதலாகப் பாடநூலாக ஆக்கப்பெற்ற பொழுது இந்த உணர்ச்சி வெளிப்படையாகப் புலயிைற்று. ஆசிரியர்களும் மாணக்கர்களும் சேர்ந்தே ஆணையை மழுப்புவதற்குத் தம்மாலானவற்றையெல்லாம் செய்தனர். வகுப்புக்களுக்கென பாடமாக வைக்கப்பெற்ற அதனை வகுப்புக்களில் தொடங்குவது பல்வேறு சாக்குப்போக்குகளால் சில இடங்களில் ஒத்திவைக்கப் பெற்றது. சில பாடல்கள் தூய்மையற்ற சமயத் தாக்குதல்களைக் கொண்டுள்ளன என்று மற்ற இடங்களில் ஆசிரியர்களே சில பாடங்களை நீக்கும் பொறுப்பினை மேற்கொள்ளலாயினர். குறிப்பாகப் பிராமணர்கள் இந்த ஆசிரியர்மீது வெறுப்புக்கொள்ளுகின்றனர்; தம்முடைய நோக்கத்திற்கு ஆதரவாக அவருடைய நடையின் இழிவழக்கையும் சமயக் கட்டுப்பாடுகளுக்கு அடங்கிவராத அவருடைய பொருளையும் வெற்றி பெற்ற வெறுப்புடன் எடுத்துக் காட்டுகின்றனர்.

முப்பதாண்டுகட்குப் பின்னர் நிலைமை சீர்திருந்தவில்லை. வில்லியம்ஹோவார்டு காம்பெல் என்ற கிறித்துவச் சமயப் பரப்பாளர் 1898-இல் சென்னை கிறித்தவக் கல்லூரி இதழில் எழுதுகையில், 'பிராமணர்கள் எப்பொழுதுமே வெறுப்பான முறையில் அவருடைய (வேமனருடைய) கோட்பாட்டை எதிர்க்கவே செய்தனர். இன்னும் அவர்கள் அவருடைய நூல்களைப் பற்றி இழிவாகவே பேசுகின்றனர்' என்று பதிவு செய்திருப்பதினின்றும் இதனை அறியலாம்.

நான்காவதாக, குறுகியபொருளில் வேமனரை ஒரு புலவர் என்று மட்டிலும் கூறுதல்கூடாது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு பொதுவிருப்பான பேச்சில் தேர்ச்சி பெற்ற வித்தகர் என்பதற்கு யாதொரு ஐயமும் இல்லை; அவர் கையாளும் ஒவ்வொரு சொல்லின் மிகச் சிறு மாறுதலையும் அறிந்திருப்பதுடன் பழைய சொற்களையும் புதுப்பொருள்களை நல்கும்படி செய்வதிலும் வல்லவர்.

9
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/16&oldid=1242408" இருந்து மீள்விக்கப்பட்டது