பக்கம்:வேமனர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்று வழங்குவது முற்றிலும் சரியன்று; காரணம், கோவரே நன்றியுடன் ஒப்புக்கொண்டபடி, சார்ல்ஸ் ஃபிலிப்பின் மொழி பெயர்ப்பே தன்னுடைய முக்கிய மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக அமைந்தது. 'தூய்மையாகப் பகுத்தறிவுள்ளவராக இருப்பதற்கும், தீவிரமான முறையில் ஒரே கடவுட்கொள்கையுடையவராக இருப்பதற்கும், விடாப்பிடியான முரட்டுக்குணமுடையவராக இருப்பதற்கும் பொருத்தமான பொருளில் சொல்லைக்கையாள்வதற்குமாக’ அவர் வேமனரைப் பாராட்டினர். ஆயினும் அவர் வேமனரை நீதியுணர்ச்சியில் திருவள்ளுவருக்கு மிகக் கீழான நிலையிலும், கவிதை ஆற்றலில் இன்னும் மிகத் தொலைவிலும்' வைத்துப் பேசினார். இந்த மதிப்பீடு சரியோ, அன்றிச் சரியன்றோ, வின்சென்ட் ஏ. ஸ்மித் என்பார் தன்னுடைய 'ஆக்ஸ் ஃபோர்டு இந்திய வரலாறு' என்னும் நூலில் மிகக் கடுமையாகவும் ஐயத்திற்கிடமற்றதாகவும் சாதியைப் பற்றிப் பழித்துக் கூறும் ஒர் இந்திய எழுத்தாளரைக் குறிப்பிட விரும்பியபொழுது அவர் வேமரின்பால் கவனம் செலுத்தி 1871-இல் வெளியிடப் பெற்ற கோவரின் 'தென்னிந்தியாவின் நாட்டுப் பாடல்கள்' என்ற நூலிலிருந்து நான்கு பாடல்களை மேற்கோளாகக் காட்டியதை சுவை பயப்பதாக உள்ளது.

வில்லியம் எச். கேம்ப்பெல் என்பார் வேமனரை மதிப்பிடுவதில் பிரௌன் அல்லது கோவரை விடச் சிறந்த தீர்ப்பாளராகத் திகழ்ந்தார். சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் தன்னுடைய கட்டுரையில் பிற செய்திகளுக்கிடையில் அவர் கூறியது:

வேமனர் மக்களின் கவிஞர் என்பதை வற்புறுத்திக்கூறலாம். அவர் புலவர்கட்காக எழுதவில்லை; ஆனால் எளிய கல்வியறிவில்லாத கிராம மக்களுக்காகவே எழுதினார். அவருடைய செய்தியின் மேம்பாட்டிற்கு ஏற்ப அவருடைய நடையிலும் எளிமையும் வேகமும் இருந்ததால் அவர் புகழுடன் திகழமுடிந்தது. வெறும் இலக்கியப் புகழைச் சிறிதும் கருதாது பண்டைய கவிதைபற்றிய விதிகளை ஏளனம் செய்தார். அங்ஙணம் செய்வதில் தனது கூரறிவினையும் காட்டினர். இந்தியாவில் பண்டைய கவிதை உண்மையில் புகழுடன் திகழ முடியாது. பெரும்பாலான பொது மக்களுக்குக் கிட்டத்தட்ட முற்றிலும் அதனைப்புரிந்து கொள்ள முடியாத நிலைமையே காரணமாகும்... எள்ளல் குறிப்பின் ஆற்றல் காரணமாகவே வேமனர் மிகவும் புகழுடன் திகழ்ந்தார். மனிதர்களின் குறைபாடுகளையும் மூடத்தனத்தையும் காண்பதற்கேற்ப அவர் கூரிய பார்வையைப் பெற்றிருந்தார். அவற்றை அவற்றின் இழிந்த தன்மையும் முட்டாள்தனமும் தெளிவாகப் புலப்படும் வண்ணம் விரிந்துரைக்கும் ஆற்றலும்

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/21&oldid=1242416" இலிருந்து மீள்விக்கப்பட்டது