பக்கம்:வேமனர்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னர்க் கூறியதுபோல் 'கோமட்டி’ என்ற சொல் வைசியர் என்ற சொல்லுக்குப் பரிணாமச்சொல்லாகும். அஃதாவது அது இந்துச்சாதிப் படிமரபில் மூன்றாவதாக இருப்பது. ரெட்டிகள் அடுத்து நிற்கும் 'சூத்திரர்’ என்ற படியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இங்ஙனம் இருக்கும்போது ரெட்டி ஒரு கோமட்டியாக இருக்கும் தோற்றத்திற்கேற்ப ஒவ்வாத் தன்மையை எங்ஙணம் விளக்குவது? மேலும், இன்னார் என்று ஆள் அறியப்பெறாத ஒரு ரெட்டி உழவர் குடும்பத்தினர் மிக விரைவாகத் திகைப்பூட்டும் செல்வத்தையும் ஆட்சியையும் எங்ஙனம் அடைந்தனர்? இந்த இரண்டு வினாக்களையும் கட்டுக் கதைகள் தாம் விரும்பியவாறு ஒரு கோமட்டி வேமரையும் அவருடைய இரண்டு கல புருடவேதியையும் கொண்டு நிறைவு செய்துவிட்டன.

வரலாற்று அடிப்படையிலும் இலக்கிய அடிப்படையிலும் மேற்கொள்ளப்பெற்ற ஆராய்ச்சி ரெட்டி அரசர்களின் குடும்பப் பெயர் தொண்டி அல்லவென்றும், ஆனால் அது தாசட்டி என்றும்; புரோலய வேமருக்கு முன்னர் அவர் தந்தையாரின் பெயர் வேமர் என்பதாகவும், புரோலய வேமரின் தலைநகர் கொண்டவீடு அல்லவென்றும், ஆனால் அது அட்டங்கி என்றும்; புரோலயாவுக்குப் பின்னர், பட்டத்திற்கு வந்தவர் அனவோத்த வேமர் என்பதும்; சிலகாலம் கழித்து அட்டங்கியிலிருந்து கொண்ட வீட்டிற்குத் தலைநகரை மாற்றியது புரோலய வேமரின் தம்பி அல்லர் என்பதும், ஆனால் அவர் அவருடைய திருக்குமாரர் என்பதும்; குமரகிரி வேமரை அடுத்து ஆட்சிபுரிந்த பெதகோமட்டி வேமர் என் பவர் அவருடைய குமாரர் அல்லர் என்பதும், அவர் அவருடைய சிற்றன்னையின் குமாரர் (cousin) என்பதும்; இறுதியாக அரச மரபின் இறுதி அரசராகிய இராச்சவேமர் என்பவர் பெத கோமட்டி வேமரின் தம்பி அல்லர் என்பதுமாகக் காட்டியுள்ளது. இது கட்டுக்கதைகள் கூறும் வரலாற்றிற்கு முற்றிலும் வேறுபட்டதாகும். "இந்த வரலாற்றுச் செய்திகள் யாவும் வேமனர் அரச மரபின் வழிவந்த இளவரசர் என்ற அறிவிப்பினை எங்ஙணம் தள்ளுபடி செய்கிறது" என்று ஒருவர் வினவலாம். அதற்குரிய விடை மிகவும் எளிதானது. கட்டுக்கதைகள் யாவும் வேமனரைக் குமரகிரி வேமர் என்பவரின் மூன்றாவது குமாரர் என்றும் அவரே கடைக்குட்டியுமாவர் என்றும் கூறுகின்றன. இந்த அரசருக்கு மூன்று குமாரர்கள் இலர்; ஆனால் அவருக்கு ஒரே குமாரர்தான்; அவரும் இளம்பிராயத்திலேயே இறந்துவிட்டார்.

கட்டுக்கதைகளின் அடிமட்டத்தையே தகர்த்தெறிவது மிகவும் எளிதானதே; இயலாதது அன்றாயினும், வேமனரின் வரலாற்றுக்குரிய நம்பகமான செய்திகளைத் திரட்டுவதென்பது மிகச்

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/36&oldid=1244246" இருந்து மீள்விக்கப்பட்டது