பக்கம்:வேமனர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரசைவர்களிடம் தாம் வற்புறுத்தி வேண்டுவது வீணே என்பதைக் காணும் வேமனர் இவ்வாறு வெகுண்டு பேசுகின்றார்: "நமது ஆறு சிந்தனை அமைப்புகளில் வீர சைவத்திற்கு நிகரானது ஒன்றுமில்லை; பல்வேறு சமயவஞ்சகர்களுள் லிங்கம் தரிப்போரை எவரும் விஞ்ச முடியாது."

விஷ்ணுவின் வழிபாட்டு முறை அல்லது "வைணவம்" என்று வழங்கப்பெறும் முறையும் அடிப்படையிலேயே மாற்றியமைக்க விரும்பும் சீர்திருத்த இயக்கமாக உயர்ந்த குறிக்கோள்களுடன் தோன்றுகின்றது; அதுவும் வேமனர் காலத்தில் தனது மூல அறிவுச் சுடரை இழக்கின்றது. அது முற்றிலும் சோர்வுற்ற நிலையை அடைந்தது என்பதற்கு ஒரே ஒரு சான்றினைத் தரலாம். அந்த அமைப்பினுள்ளேயே சமய உட்பிரிவுகள் மிகவும் வெறுக்கத்தக்க கனவாகவும், மடத்தனமாகவும் வளர்ந்து, ஒரே விஷ்ணுவின் அடியார்களாக இருந்தபோதிலும், நஞ்சைப்போல் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனர். நாம் மதிப்பிடும் காலத்திற்குச் சற்று பின்னருள்ள காலத்தில் பிரௌன் குறிப்பிட்டுள்ளபடி அவர்கட்கிடையே எழும் மாறுபாட்டின் முக்கிய செய்தி தத்தம் கோட்பாட்டிற்கு உரிய அடையாளம் எந்த வடிவத்திலிருக்க வேண்டும் என்பதாகும். அதாவது, ஒவ்வொருவரும் காலையில் தீர்த்தமாடியபிறகு தமது நெற்றியில் தீட்டிக்கொள்ளும் அடையாளமாகும். (பிரெளனின் கூற்றுப்படி) "அவர்களிடையே எழுந்த பூசல் கேடளாவிய குழப்பங்களையும் பல உயிர்களின் இழப்பையும் விளைவிக்கும் அளவுக்கு மனக்கசப்பை உண்டாக்கியுள்ளது".

போட்டியிடும் சமயங்களான சைவம், வைணவம் என்ற சமய உட்பரிவுகளிடையே நிலவும் பழம்பகைகள் மிகமிகக் கொடியவையாகும். சிலசமயங்களில் அவை முற்றுகையிட்ட போர்களில் கொண்டு செலுத்தி அறிவற்ற படுகொலையில் முடிந்துள்ளன. கடுந்தாக்குதல்கட்கு முன்னர் கொந்தளிக்கும் பகையும் உணர்ச்சி மிகுதியும் நிலவுகின்றன; உண்மையில் அவ்விடைக்காலங்கள் ஆயுதம் தாங்கிய தற்காலிகப்போர் நிறுத்தக் காலங்களாகும். நம்பத்தகாததுபோல காணப்பெறினும், ஒரு சைவரின் உடலை ஒரு வைணவரின் உடல் எப்படியோ தொட்டுக்கொள்ள, நேர்ந்தால் அவர் தீர்த்தமாடித் தூய்மைபடுத்திக்கொள்ளவேண்டும். இங்ங்னமே, ஒரு வைணவரின் தொடுகை ஒரு சைவரின் தூய்மையைக்கெடுத்து விடுகின்றது. இந்தத் தூய்மையான அவக்கேட்டினல் அதிர்ச்சியடைந்த வேமனர் கேட்கின்றார்: “ஒரு சைவரையும் ஒரு வைணவரையும் ஒரேகாலத்தில் காலன் கொண்டுபோனல் சைவரின் உடல் புதைக்கப்படுகின்றது, வைணவரின் உடல் எரிக்கப்படுகிறது என்ற வேறுபாட்டைத்தவிர அவர்களிடையே வேறு என்ன வேறு

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/57&oldid=1250771" இலிருந்து மீள்விக்கப்பட்டது