பக்கம்:வேமனர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரக்க ஓதுவதால் அவர்களுடைய குரல்வளைகட்கு நல்ல பயிற்சியாகலாம்; ஆளுல் அதைத் தவிர வேறொரு பயனும் இல்லை. வேதச் சடங்கு முறைகளும் அதைப்போலவே பயனற்றவை. புராணங்கள் "பொய்களின் கதம்பம்" ஆகும். முக்கியமாகப் புராணங்களால் உயிர்ப்பூட்டப்பெற்ற சிலை உரு வழிபாடு, அவ்வழிபாடுபுரிவோரை முடிவான உண்மைகளை அறியாதவாறு செய்து விடுகின்றது; தம்முடைய நம்பிக்கையைச் செதுக்கப்பெற்ற கற்களின்மீது வைப்பவர்கள் 'அறியாத', 'அறிவற்ற', உணர்வற்ற', 'அறிவிழந்த மக்களாவர். 'வண்ணப்பகட்டான திருக்கோயில்களை எழுப்பி அவற்றுள் திருவுருவச்சிலைகளை நிறுவிய அரசர்கள் யாவரும் போர்களில் தோற்கடிக்கப்பெறுகின்றனர். ஆனால் அந்தத்திருவுருவச் சிலைகளை உடைப்பவர்கள் நாட்டை ஆண்டு வருகின்றனர். திருவுருவச் சிலைகளே கடவுளாக இருப்பின் அவை ஏன் தம்மை வழிபாடு செய்பவர்களைக் காப்பாற்றவில்லை?” என்கின்றார் வேமனர். தர்மசாத்திரங்கள் என்று வழங்கப்பெறுபவை நீதியைக் கொண்ட நூல்களன்று; அவை யாவும் படுமோசமான அநீதிகளைக் கொண்டவையாகும். நூல்களின்மீதும் அந்நூல்கள் நுவலும் அறிவின்மீதும் நம்பிக்கை வைப்பது பயனற்றது. ஒருவரால் அடைய முடியுமானால் முழுமுதற்பொருளுடன் கொள்ளும் நேர் அதுபவம் மட்டிலுமே முக்கியமாகின்றது. அது மட்டிலுமே வீடு பேற்றிற்குரிய வழியுமாகும்.

புரியாத விவரங்களில் நுழையாமலேயே வேமனரின் சமய விளக்கக் கோட்பாடு அத்துவிதம் (குறிக்கோள் நெறி) என்று சொல்லலாம். வேதங்கள் வேறு பழைய நூற்றொகுதிகள் இவற்றின் மேலாண்மை உரிமைகளை மறுத்தலைத் தவிர, சீவான்மாவையும் பரமான்மாவையும் இன உறுதிசெய்வதன் வற்புறுத்தலிலும் அவர் பிற அத்துவிதவாதிகளிடமிருந்து வேறுபடுவதுபோல் காணப்படுகின்றார், "நான்முகனக் கொன்று அவரைத் திருமாலுடன் இரண்டறக் கல; திருமாலைக்கொன்று அவரைச் சிவனுடன் இரண்டறக் கல; சிவனைக் கொன்று அவரை உன்னுடன் இரண்டறக் கல. அதன் பிறகுதான் நீ ஒரு நிறைவுடைய யோகி ஆகின்றாய் என்று கூறுகின்றார் அவர். இத்தகைய ஒரு செய்தியை மற்ற எந்த இந்துச் சிந்தனையாளர் சொல்லத் துணிவுகொண்டார்?

வேமனரின் மெய்விளக்கம் டாக்டர் ஜி.வி. கிருஷ்ணராவ் அவர்களால் இங்ங்னம் விளக்கப்பெறுகின்றது:

ஒவ்வோர் உயிரியின் இதயத்திலும் உறைந்து கொண்டிருக்கின்ற இறைவன் மனிதரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர் அல்ல. மனிதன் தன்னுடைய தன்-முனைப்பினையும் மன

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/82&oldid=1252128" இலிருந்து மீள்விக்கப்பட்டது