பக்கம்:வேமனர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துக்காட்டாக இங்கு வேமனரின் பாடல்களில் ஒன்றின் மொழி பெயர்ப்பைக் காண்போம். "சான்றோர் ஒருவருடைய முதுகில் ஒரு கொப்புளம் கிளம்பினால், அது நாடறிந்த செய்தியாகின்றது. ஆனால் எளியவர் ஒருவர் வீட்டில் திருமணம் ஒன்று நிகழ்ந்தாலும் ஒருவரும் அந்நிகழ்ச்சியைத் தம் காதில் போட்டுக்கொள்வதில்லை". தாம் கையாளும் ஆங்கிலச் சொற்றொடர்களின் சில குறைகளைத் தவிர, வேமனர் "சான்றோர் ஒருவரிடமிருந்து" "ஏழை யொருவரை வேறுபடுத்திக் காட்டுகின்றார் என்ற ஒரு தவறாண எண்ணத்தை விளைவித்து வேமனருக்கு ஓர் அநீதியை இழைத்துள்ளார். அத்தகைய முட்டாள்தனமான செயல்புரியும் அளவுக்கு வேமனர் ஒரு தரக்குறைவான கவிஞர் அல்ல. "சான்றோர் என்று சொல்லுக்குச் சொல் பொருள்படும் புண்யமுகலவாடு" என்ற சொற்றொடரை அவர் கையாண்டுள்ளார் என்பது உண்மையே. சென்ற பிறப்பில் நற்குணம் நிறைந்தவர்கள் மட்டிலுமே இப்பொழுது செல்வர்களாகப் பிறக்கின்றனர் என்ற இந்து சமய நம்பிக்கையைத் தெளிவாக அறிந்தவரைப் பொருத்தமட்டிலும் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் கையாளப்பட்டுள்ள அந்தச் சொற்றொடர் செல்வந்தர்" என்றே பொருள்படுகின்றது. முன்னரே கூறப்பெற்றுள்ளதைத் திரும்பக் கூறின், வேமனருக்காக அதிகத் தொண்டாற்றிய பிரெளனக் குறை கூறுவது வணக்க இணக்கமற்ற செயலாகும். அதே சமயத்தில் வேமனரை ஆங்கில மொழிமூலம் உலகினருக்கு அறிமுகப்படுத்துவதற்கு அவருக்கு ஓர் இராஜாஜி அல்லது இரவீந்திரநாத் தாகூர் கிடைக்கவேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். "மறைஞானி ஒருவரின் சிந்தனை யோட்டங்கள்" என்ற தலைப்பில் அண்மையில் வெளிவந்துள்ள வேமனரின் பொறுக்கி எடுத்த சில பாடல்களின் மிர்முகம்மதுகான் என்பாரின் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரோன் என்பாரின் மொழிபெயர்ப்பைவிடச் சிறந்ததாகவே அமைந்துள்ளது எனலாம்; ஆனால் கான் அவர்களே "வேமனரின் கவிதைச்சொல்வளத்தின் அரிய நுட்பங்களை யெல்லாம் முற்றிலும் பாராட்டும் அளவுக்குப் போதுமான தன் தெலுங்கு மொழிஅறிவுத்திறன் அமையவில்லை" என்பதை ஒப்புக் கொள்ளுகின்றார்.

வேமனரின் கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கு ஓர் இராஜாஜி அல்லது ஓர் இரவீந்திரநாதர் தேவைப்படுவதுபோலவே அவருடைய திரு உருவத்தை வண்ண ஓவியத்தால் தீட்டுவதற்கு ஓர் இராஃபேல் அல்லது ஓர் இரெம்பிரண்ட் தேவைப்படுகின்றனர். அத்தகைய உன்னத நிலையிலுள்ள தலைவர் ஒருவர்தான் வேமரின் கண்களின் ஒளியினையும், அவர்தம் இதழ்களில் திகழும் ஏளனமான புன்முறுவலையும், அவர்தம் நடையின் துள்ளலையும் கண்டு

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/91&oldid=1282641" இலிருந்து மீள்விக்கப்பட்டது