பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

148 வேர்ச்சொல் சுவடி மீதம்: 1. மிச்சம், 2. எஞ்சியிருப்பது. மீதி = மிச்சம் [மீதி> மீதம்.] மீறல் : சட்டம், உரிமை முதலியவற்றை மீறும் செயல். மீறுதல் = மிகுதல் [மீறு> மீறல்] மீன் : உடலில் அமைந்திருக்கும் மின்னும் சிறகு போன்ற செதிளாலும், வாலாலும் நீந்திச் செல்லக்கூடிய நீர்வாழ் உயிரினம். [மின் > மீன் ; மின் = மின்னுதல்] முக-த்தல் : நீர்ப் பொருளையும் கூலப் பொருளையும் கலத்தால் (அ) படியால் மொண்டளத்தல். (முழு>முகு முக முக-த்தல். முகப்பு: வீட்டின் முன்புறக் கட்டடம் (முகம் முக முகப்பு] முகம் : தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம் முள் முகரை > முகம். முகர்-தல் : 1. மூக்கால் மோத்தல் 2. மணமறிதல். [ முகம்> முகர்> முகர்-தல்.] முகவை: 1. நீர் முகக்குங் கருவி, 2. அகப்பை. முழு> முகு>முக முகவை] முகாமை: 1. முதன்மை, 2. தலைமை. முகம் = முதன்மை (முகம்> முகமை முகாமை. முகிழ்-த்தல் : 1. அரும்புதல், 2. தோன்றுதல். முல் = இளமைப் பொருள் [ முல்>முள்>முளு முகு>முகிழ் முகிழ்-த்தல்.]