பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி முகுளம்: மூளையின் பின் பகுதி முல்= பொருந்தற் பொருள் [ முகிள்> முகுள்>முகுளம்] முகை : 1. அரும்பு, 2. குகை, 3. கூட்டம். முல் = இளமைப் பொருள் முகுள்> முகு > முகை] முட்டி : விரல்களை மடக்கியதும் மேடாகத் தெரியும் எலும்பு (முட்டு> முட்டி] முட்டு-தல் : தலையை அல்லது தலையால் ஒன்றின் மீது மோதுதல் முல் = பொருந்தற் கருத்துவேர் [ முல்>முது>முத்து முட்டு முட்டு-தல்] முட்டை: பறவைகளின் ஊர்வனவற்றில் பெண்ணினம் இடும் உருண்டை வடிவப் பொருள். முல் = வளைதல் பொருள் [முல்>முள் முட்டு முட்டை முடக்கம்: 1. தடை, 2. தேங்கிக் கிடக்கை. முடக்கு = தடுத்தல், முடங்கச் செய்தல் [ முடக்கு>முடக்கம்.] முடம் : கை அல்லது கால் செயல்படாத நிலை முள் = வளைதற் கருத்துவேர் [ முள்> முண்> முணம் முடம்/ முடி : 1. தலை, 2. குடுமி. முல் = பொருந்தற் கருத்துவேர் (முட்டு>முட்டி முடி] முடி-த்தல்: நிறைவேற்றுதல் முள் = வளைதல் கருத்துவேர் (முட்டு>முட்டி முடி முடி-த்தல் 149