பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

150 வேர்ச்சொல் சுவடி முடிவு: தொடங்கியதற்கு இறுதி முடி = முடிவு [முடி>முடிவு] முடுக்கு-தல் : 1. மாடு முதலிய விரட்டி ஓட்டுதல், 2. விரைவு படுத்துதல். முள் = நீட்சிக் கருத்துவேர் முடு>முடுகு முடுக்கு> முடுக்கு-தல்/ முடை-தல் : பாய், கூடை முதலிவற்றைப் பின்னுதல். மிடை = பொருந்துதல் கருத்துவேர் [மிடை முடை> முடை-தல்.] முதன்மை : 1. தலைமை, 2. முன்னுரிமை முதலிடம் வகிப்பது. முல் = முன்மைக் கருத்துவேர் [ முதல்> முதன்> முதன்மை] முதியோர் : அகவையில் முதிர்ந்தவர் முதுமை = பழைமை [ முதுமை > முது முதியோர்] முதிர்-தல் : மரம், காய் முதலியவை இளமைத் தன்மை நீங்கி முற்றுதல். முல் = முன்மைக் கருத்துவேர் [ முது>முதிர்> முதிர்-தல்.] முதிர்ச்சி : 1. பழுத்த பருவம், 2. அகவை முதுமை. முல் = முன்மைக் கருத்துவேர் [ முது>முதிர்>முதிர்ச்சி] முத்து : சிப்பியில் இருக்கும் உருண்டை வடிவ வெண்ணிறப் பொருள் முள் = பொருந்துதல் கருத்துவேர் [ முல்>முள்> முட்டு முத்து.] முதுகு: மனித உடலின் பின் கழுத்திலிருந்து இடுப்பு வரையுள்ள பகுதி முள் = பொருந்தற் கருத்துவேர் (முது>முதுகு] முதுமை: அகவை முதிர்ந்து உடல் பலமும் தோற்றக் கவர்ச்சியும் இழந்த முதுமை முல் = முன்மைக் கருத்துவேர் [மூ முதுமை]