பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி முந்தி : 1. முன்னிடம், 2. முன்றானை. முல் = முன்மைக் கருத்துவேர் [முந்து>முந்தி முந்து-தல் :1. காலம், இடம் முதலியவற்றால் முற்படுதல், 2.முதன்மையாதல் முல் = முன்மைக் கருத்துவேர் [ முந்து> முந்து -தல்) முரடு: உறுதியும் கடினத்தன்மையும் கொண்டது. முள் = வளைதற் கருத்துவேர் முருடு முரடு} முரி-தல்: கரும்பு, கம்பு முதலியவை வளைந்து ஒடிதல் முல் = வளைதற் கருத்துவேர் [ முல் முரு> முரி> முரி-தல்.] முழக்கம்: 1. பேரொலி, 2. ஆரவாரம். முழங்கு = உரக்க மேடையில் பேசுதல் [ முழங்கு>முழக்கு> முழக்கம்] முழங்கு-தல்1: இடி, பீரங்கி போன்றவற்றால் எழுப்பப்படும் ஒலி (முழ>முழ>முழங்கு முழங்கு-தல்] முழுங்கு-தல் : தொண்டைக்குள் முழுகச் செய்தல் முல் = துளைத்தற் கருத்துவேர் [முழுகு>முழுங்கு>முழுங்கு-தல்.] முளை-த்தல்: பயிரில் முளை முதலியன தோன்றுதல் முல் = இளமைப் பொருள் [ முள்> முளை>முளை-த்தல்.] முற்றம் : வீட்டின் முன்பகுதி முன்றில் = வீட்டின் முன்னிடம் [ முன்றில்>முற்றில் முற்றம்] முற்று-தல் : 1. முதன்மையடைதல், 2. முதிர்தல். முல் = வளைதற் கருத்துவேர் [ முது>முத்து >முற்று முற்று-தல் முற்றுகை: கோட்டையைப் பகைவர் படை வளைத்தல் முல் = வளைதற் கருத்துவேர் 151