பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

152 வேர்ச்சொல் சுவடி ( முற்று>முற்றுகை.] முறி-தல்: வளைந்து ஒடிதல் முல் = வளைதற் கருத்துவேர் (முறு>முறி> முறி-தல்] முறிப்பு: மாற்று மருந்து [ முறி>முறிப்பு] முறிவு: எலும்பு உடைகை முல் = வளைதற் கருத்துவேர் [ முறி>முறிவு] முறுக்கு-தல் : கயிறு, நார் முதலியவற்றைத் திரித்தல். முல் = வளைதற் கருத்துவேர் முறுகு>முறுக்கு முறுக்கு-தல்] மூக்கு : மூச்சு இழுத்து விடுவதற்கும் நறுமணத்தை உணர்வதற்கும் பயன்படுகின்ற உடல் உறுப்பு. முகத்தல் = மூக்கால் மணத்தை நுகர்தல் [முகடு>முகு>முக்கு மூக்கு./ மெத்தனம் : 1. காலத்தாழ்ப்பு, 2. பொருட்படுத்தாமை. (மெது>மெத்து மெத்தனம்.] மெய்: 1. உண்மை, 2. ஆதன், 3. உடல் மே = மேல் (மே>(மேய்)>மெய்] மெருகு : 1. பளபளப்பு, 2. பொலிவு. மெது> மெதுகு மெருகு/ மெழுகு-தல் : இடத்தைத் தூய்மை செய்வதற்காக சாணக்கரைசலால் தேய்த்துப் பூசுதல். மெல்>மெல்கு மெழுகு மெழுகு-தல்] மேய்-தல்: விலங்கு முதலியன உணவு கொள்ளுதல் [ (மே) மேல்> மேய் -தல்]