பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி வெளு-த்தல்: 1.வண்மையாதல், 2. நிறங்கெடுதல், 3. விடிதல், 4. உண்மை நிலை வெளிப்படுதல். விள் = வெண்மைக் கருத்துவேர் [ வெ> வெளு வெளுத்தல்.] வெற்றி: 1. வெற்றி கொள்ளுதல், 2. மேம்படுத்துதல். விர் = விருது [வெல் (வில்) > வீறு வெற்றி வேகு-தல்: 1. எரிதல், 2. புழுங்குதல், 3. உணவுப்பொருள் கொதிக்கின்ற நீரில் (அ) எண்ணெயிற் பதமாதல். வே = வெம்மைக் கருத்துவேர் [ வே> வேகு வேகு-தல்] வேழம் : 1.வெண் கரும்பு, 2. நாணல்வகை, 3. வெண் யானை வெள்> வேள் வேளம் வேழம்.] வேள்வி: 1. திருமணம், 2. நல்வினை. வேள் = விருப்பம் வெள்> வேள் வேள்வி.] வேளாண்மை: 1. புதியவரை விருந்தோம்பலில் பேணுந்தன்மை, 2. வேளாளர் செய்யும் பயிர்த் தொழில். வேள் = விருப்பம் வேள்> வேளாண் வேளாண்மை] வேற்றுமை: 1. வேறுபாடு, 2.ஒற்றுமையின்மை, 3. மாறுபாடு, 4. ஒரு பொருளின் வேறுபாடு காட்டற்குரிய தன்மை. விள் = பிளவுப் பொருள் [விள் வெறு> வேறு வேற்றுமை 159