பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

158 வேர்ச்சொல் சுவடி வெக்கை : 1. வெப்பம், 2. எரியும் நெருப்பினின்று வீசும் அனல். வெள் = வெம்மை கருத்துவேர் [வெள்>வெள்கை>வெட்கை வெக்கை] வெகுள்(ளு)-தல்: 1.சினத்தல், 2. பகைத்தல். வெள் = வெம்மைக் கருத்துவேர் வேகு> வெகுள்>வெகுள்(ளு)-தல்.] வெகுளி : 1. முக்குற்றங்களுள் ஒன்றான சினம், 2. கபடமற்றவன். வேகு - (வெகுள் + இ) >வெகுளி] வெட்டு-தல் : 1. தவசங்களை அளவிடும் போது தலை வழித்தல், 2.துணி, விள் = நீங்கற் பொருள் முடி முதலியன துண்டித்தல். [விள்> வெள்>வெட்டு-தல்.] வெடி-த்தல் : 1.பிளவடைதல், 2. ஓசையெழப் பிளவுறுதல், பொறாமையால் துடித்தல். விள் = பிளவுப் பொருள் [விள்>வெள்>வெடி-த்தல்.] வெடிப்பு :7. ஓசையோடு வெடித்து எழுகை, 2. நீரின்றி வெடிப்புடன் காணப்படும் நிலப்பகுதி. விள் = பிளவுப் பொருள் [விள்>வெடி>வெடிப்பு] வெம்பு-தல் :1. மிகச் சூடாதல், 2. மனம் புழுங்குதல், 3. பிஞ்சின் பழுத்தல். [விள்>வெம் > வெம்பு வெம்பு-தல்] வெல்(லு)-தல் : 1.வெற்றி கொள்ளுதல், 2. மேம்படுத்துதல். [வெல்>வெல்(லு)- தல்.] வெள்ளம்: 1.புது நீர்ப்பெருக்கு, 2. மிகுதி. விள் = வெண்மைக் கருத்துவேர் வெள்>வெள்ளம்.] வெளிச்சம் : 1. ஒளி, 2. விளக்கு, 3.தெளிவு. விள் = ஒண்மைக் கருத்துவேர் [விள்> வெள்> வெளி வெளிச்சம்]