பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி [Mள்> MN > விழி-த்தல்.] விளக்கு : 1. ஒளிதருங்கருவி, 2. ஒளிப்பிழம்பு, 3. ஒளிபெறச் செய்கை. விள் = ஒண்மைப் பொருள் [விளங்கு> விளக்கு] விளக்கு-தல் : 1.தெளிவாக்குதல், 2. துடைப்பத்தாற் பெருக்குதல். விள் = ஒண்மைக் கருத்துவேர் [விள்> விளங்கு > விளக்கு >விளக்கு-தல்.] விளங்கு-தல் : 1.ஒளிர்தல், வெளிப்படையாதல், 2.பளபளத்தல், 3. வெற்றிவளர்ச்சியாதல். விள் = ஒண்மைப் பொருள் [விள்>விள> விளங்கு-தல்] விளம்பு-தல்: 1. வாய்விட்டுச் சொல்லுதல், 2. எல்லாரும் அறியக் கூறுதல், 3.பறைசாற்றுதல். [விள்>விளம்பு > விளம்பு-தல்] விளி-த்தல் : 1. அழைத்தல், 2. சொல்லுதல், 3. மறைந்தவனை வெளிப்படுத்துவது போல் கூப்பிடுதல். விள்ளுதல் = கூவியழைத்தல் [Mள்>MO>Mளி-த்தல்.] விளை-தல் : 1. தவசம் முதலியன விளைதல், 2. பயன்தருதல். விள் = பிளவுக் கருத்து, மண்ணைப் பிளந்து விளைதல் [விள்>விளை-தல்] விறை-த்தல் : 1. மரத்துப் போதல், குளிர் முதலியவற்றால் நடுங்குதல், 2. செருக்கு காட்டுதல். (விறு>விறை-த்தல். வீசு-தல் : 1. எறிதல், 2. சிறகடித்தல், காற்று முதலியன அடித்தல், 3. தீநாற்றம் வீசுதல். விள் = நீங்குதல் [விள்>விசு >வீசு-தல்.] வீணை: யாழ்வகை விண் = நரம்பு தெறித்தல் [விண்>வீண்வீணை] 157