பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

156 வேர்ச்சொல் சுவடி விடியல்: 1. விடியற்காலை, 2. பொழுது விடிகின்ற நேரம். விள்ளுதல் = தெளிவாதல் [விள்> MO>விடி விடியல்] வியப்பு : 1.புதுமை, 2. பாராட்டு, 3. மேம்பாடு. விய= அகலம் [விய> வியப்பு] வியர்-த்தல் : 1. உடலின் மேற்புறத்து நீர்த்துளி தோன்றுதல், 2. பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல். விள் = வெம்மைக் கருத்துவேர் [விள்> விளர்> வியர்-த்தல்] விரல் : கை, கால்களினிறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு. விள் = பொருந்துதல் கருத்துவேர் [ விள்> விரி> விரல்] விரி-தல்: 1. மலர்தல், 2. அவிழ்தல், 3. பிளவு கொள்ளுதல். விள் = பிரிதல் கருத்து [ விள்> விரி > விரிவு >விரி-தல்] விரிப்பு : 1. விரிக்குங் கம்பளம். 2. மலர்த்துகை. [விரி> விரிப்பு] விருது : 1. வெற்றிச் சின்னம், 2. பட்டம். வில்(வெல்) = வெற்றிப் பொருள் (வில்(வெல்)> விர் விரு விருது} விருந்து : 1. விருந்தினர், 2. புதியவர், 3. விரும்புதற்குரியோர். விள் = விரும்புதற் பொருள் [விள்> விர்>விரு விருந்து] விலகு-தல்: 1. எறிதல், 2. விட்டு நீங்குதல். விள் = பிளவுப் பொருள் [விள்> வில்>விலகு-தல்] விழி-த்தல் : 1. கண்திறத்தல், 2. விழிப்பாக இருத்தல், 3. விரித்து நோக்குதல். விள் = பிளவுக் கருத்துவேர்