பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி (மழு மழு வழு வழுக்கு-தல்] வாய் : முகத்தில் அமைந்திருக்கும் திறந்த உறுப்பு வய் = பொருந்தற் கருத்துவேர் [வய்> வயி> வாயி>வாய்.] வார்ப்பு: 1. மாழையை உருக்கி வார்த்தல், 2. மேற்பூசுதல். [வரி>வார்> வார்ப்பு.] வாரி : 1. சீப்பு, 2, குப்பை, 3. வாருங்கருவி. வரிதல் = சுருட்டி எடுத்தல் [வர்> வார்> வாரி] வாழ்க்கை : 1. இல்வாழ்க்கை, 2. நல்வாழ்வுநிலை, 3. செல்வநிலை. வாழ் = உயிருடன் இருத்தல் [வாழ்> வாழ்க்கை.] வாழ்த்து-தல் : 1.பாராட்டுதல், 2. மங்கலம் பாடுதல், 3. போற்றுதல். (வாழ்> வாழ்த்து-தல்.] வானம்: 1. வானுலகம், 2. நெருப்பு, 3. முகில், மழை. வால் வான் வானம்.] விசை : விரைவு, நீங்கும் ஆற்றல். விள் = பிளவுப் பொருள், நீங்கற் பொருள். [விசு விசை] விசும்பு: 1.வானம், 2. தேவருலகம், 3. முகில். (விள்> (விசு) - விசும்பு.] விசுறு: காற்று வீசுதல் விள் = நீங்கல் [விளவு> விசு > விசுறு. விட்டம் : 1. வட்டத்தின் குறுக்களவு, 2. தலைக்கு மேலுள்ள முகட்டு உத்தரம். முட்டு> (முட்டம்) - விட்டம்.] விடலை : இளம் பருவத்தினன் விடை = காளை, காளைப்பருவம் [விடை> விடலை] 155