பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சேவூர் சோ. இராமச்சந்திரன் இந்துசமயம் (ம) அறநிலையத்துறை அமைச்சர் தலைமைச் செயலகம் GlGOT 6060-600 009. வாழ்த்துரை “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்றார் பாவேந்தர். அவரின் எண்ணத்தை ஈடுசெய்யும் வண்ணம் தமிழுக்கு வளம் சேர்க்கும் சிறப்பான பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் மறைந்து மறையாது மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். தமிழ் மொழியின் உயர்வுக்காக உருவாக்கிய வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் செயற்படுத்தப்படுவதுதான் மாண்புமிகு அம்மாவின் பொற்கால ஆட்சியின் குறிக்கோள். அக்குறிக்கோளை இலக்காகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சியின் தொடர் சாதனையாக 'வேர்ச்சொல் சுவடி' என்னும் நூல் வெளியிடப்படுகிறது. பல்துறை அறிஞர்களுக்கும், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் அரிய கையேடாக உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இந்த நூலின் தனிச்சிறப்பாகும். "தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும் அறிவுயரும் அறமும் ஓங்கும்" என்ற பாவேந்தரின் வாய்மொழிக்கிணங்க தமிழும் அதன் பொருட்டுத் தமிழ்நாடும் உயர்வதற்கு இன்னொரு படிக்கல்லாக அமைந்திருக்கும் "வேர்ச்சொல் சுவடி" என்னும் இந்நூல் சிறப்பாக வெளிவருவதற்குக் காரணமாக விளங்கிய தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அரசு செயலாளர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் (முழுக்கூடுதல் பொறுப்பு), இந்நூலைச் சிறப்புற உருவாக்கிய அகரமுதலி இயக்ககத்தின் பணியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சோ.சிரமட்டங்கிதன் (சோ. இராமச்சந்திரன்)