பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரா.வெங்கடேசன் இஆப, அரசு செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அணிந்துரை "தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்” தலைமைச் செயலகம் GGOT 6060-600 009. என்று தமிழின் இனிமையை எடுத்துரைத்தார் பாரதியார். இனிமையும் தொன்மையும் இரண்டறக் கலந்த பெருமைகொண்டது தமிழ்மொழி. அது காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் வல்லமை வாய்ந்தது என்பதற்குக் கணினியிலும் கனித்தமிழ் கலந்துறவாடுவதே சான்று. பிறமொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கவல்ல தமிழ்மொழி, தன் சொல்வளத்தை அயல்மொழிகளுக்கு அள்ளி வழங்கியபோதும், வளங்குன்றாது தனக்கான புதிய சொற்களைத் தன் வேரிலிருந்தே காலத்திற்கேற்ப உருவாக்கிக்-ெ காள்ளக்கூடியது என்ற உண்மையை மொழியியலறிஞர்கள் முன்மொழிந்துள்ளனர். அந்த மொழியியல் உண்மையை வழிமொழிந்து அதற்கு வலுசேர்க்கும் வகையில், தூயதமிழ் வேரிலிருந்து தழைக்கும் அடிப்படைத் தமிழ்ச் சொற்களைத் தொகுத்து 'வேர்ச்சொல் சுவடி' என்னும் நூலை வெளியிட்டுள்ளது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம். "தமிழ் உயர்ந்தால் தமிழனும் உயர்வான்” என்று முழங்கிய மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தொகுத்தளித்த வேர்மூலங்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ள இந்த நூல் தமிழின் வளர்நிலை, தமிழரின் வாழ்நிலை வரலாறு பே- என்றவற்றை அறியவும் துணைநிற்கும். மேலும், ஆதித்தமிழ் வேர்மூலங்களை அறிமுகப்படுத்துவதன்வழி, அறிவியல் தொழில்நுட்பத்துறையில் பல்துறை சார்ந்து உருவாகும் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தமிழ்க் கலைச்சொற்களை வடிவமைக்க எண்ணும் ஆய்வாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் இந்நூல் வழியமைத்துக் கொடுப்பதோடு, வேலைவாய்ப்பிற்கான போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பெரிதும் பயன்படும். “பொருள்மிக்க தமிழ்மொழிக்குப் புரிந்திடுவீர் நற்றொண்டு!” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்வரிக்கிணங்க, தமிழ்மொழியின் வியத்- தகு தனிப்பெருமையை உலகோர் உணர்ந்தறிவதற்கு உதவும் வகையில் அமைந்த 'வேர்ச்சொல் சுவடி' என்னும் நூல் செம்மையுற உருவாவதற்கு உறுதுணையாக இருந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் (முழுக்கூடுதல் பொறுப்பு), பதிப்பாசிரியர்கள், உதவிப்பதிப்பாசிரியர், தொகுப்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை உரித்- தாக்குகிறேன். 713/17 (இரா.வெங்கடேசன்)