பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் கோ. செழியன் இயக்குநர் (முழுக்கூடுதல் பொறுப்பு) பதிப்புரை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சென்னை-113. "தனிமைச் சுவையுடைய சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை!" என்று தமிழ்ச்சொல்லின் இனிமையையும் பெருமையையும் எடுத்துரைத்தார் பாவேந்தர் பாரதிதாசன். வேய்ங்குழல் வழிப் புகும் காற்று இசையாய் மிளிர்வதுபோல், சொல்லானது பொருளோடு பொருந்தும்போதுதான் மொழி என்ற கட்டமைப்பு முழுமைபெறுகிறது. மாந்த இனத்தின் முதன்மை அடையாளமாக விளங்குவது மொழி; மொழியின் பெரு-ை மயைப் பறைசாற்றுவது அம்மொழியிலுள்ள சொல்வளம். எனவேதான், " உலகுக்குத் தமிழ்மொழியின் உயர்வுதனைக் காட்டுவது சொற் பெருக்காம்!" என்று தமிழ்மொழியின் சொல்வளத்தைப் புகழ்ந்துரைத்தார் பாவேந்தர் பாரதிதாசன். சீர்மிகு சொல்வளத்தையும் சார்பின்றித் தனித்து இயங்கும் ஆற்றலையும் கொண்டு விளங்குவது தமிழ்மொழி. அத்தொன்மைமிகு தமிழ்மொழியின் சொல்வளத்தைப் பதிந்து காப்பதில் அகரமுதலிகளின் பங்கு அளப்பரியது. நடப்பிலுள்ள நற்றமிழ்ச் சொற்களோடு மக்கள் வழக்கில் மறைந்துவிட்ட நல்ல தமிழ்ச் சொற்களையும் பதிவு செய்து காப்பாற்றினால்தான் தமிழினத்தின் மரபுசார் பண்பாடு, வாழ்வியல், வரலாறு போன்றவை காக்கப்படும். எம்மொழித் துணையுமின்றித் தனித்தியங்கவல்லதும் பிற மொழிகளுக்குச் சொற்கொடை வழங்கியதுமான தமிழ்மொழி, தனக்கான சொல்வளத்தைத் தன் வேர்மூலத்திலிருந்தே விளைவித்துக் கொள்ளக்கூடிய தகுதி படைத்ததாகும். என- வேதான் தொல்காப்பியனாரும், "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று மொழிந்துள்ளார். அக்கருத்தை உணர்ந்த மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், தமிழ்ச் சொற்களை ஆய்ந்து வேர்மூலங்களைக் கண்டறிந்தார். அப்பெருமகனாரின் நூல்களிலும் சொற்பிறப்பியல் அகரமுதலியிலும் பதிவுசெய்துள்ள வேர்மூலங்களை அடிப்ப–ை டயாகக் கொண்டு இவ் 'வேர்ச்சொல் சுவடி' தொகுக்கப்பட்டுள்ளது. இஃது எழுத்- தாளர்களுக்கும், போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் துணைநிற்கும் என்ப-ே தாடு கலைச்சொல்லாக்கத்திற்கும் வழிகாட்டும் என்பது எம் நம்பிக்கை. தகத் தகாயத் தமிழ் தழைத்தோங்க இந்த 'வேர்ச்சொல் சுவடி' என்ற அரிய நூலைச் செம்மையுறத் தொகுத்து வெளியிடுவதற்கு ஊக்கமளித்த மாண்புமிகு இந்துசமயம் (ம) அறநிலையத்துறை அமைச்சர், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககப் பதிப்பாசிரியர்கள், உதவிப் பதிப்பாசிரியர், தொகுப்பாளர்கள், கணிப்பொறியாளர்களுக்கும், இந்தநூலை அச்சிட்டு வழங்கிய எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநர் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்தும். (கோ.செழியன்)