பக்கம்:வேலின் வெற்றி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வேலின் வெற்றி "நங்கையே! நீ சொன்னது நன்று நின் கருத்து முற்றுப்பெற வேண்டுமாயின், ஒன்று கூறுகின்றோம், கேள். மேருமலையோடு உறவு பூண்ட இமயமலையின் அரசன் உன்னைத் தன் மகளாக முறைமையோடு எடுத்து வளர்த்து, பின்பு காதலோடு எமக்குக் கடிமணம் செய்துகொடுத்தற்காகக் கடுந்தவம் புரிகின்றான். ஆதலால், நீ குழந்தை வடிவம் எய்தி அம் மன்னனை அடைவாயாக. அவன் மலையில் நீ வளர்ந்து தவஞ் செய்யும் காலத்தில், உலகில் உள்ள சிவ கணங்களும், எண்ணிறந்த பெருந் தேவரும் சூழ்ந்துவர, நாம் அங்குப் போந்து, நின்னை மணம் செய்து, இக் கயிலை மலைக்கு அழைத்து வருவோம்” என்றார் சிவபெருமான். தலைவனைப் பிரிய நேர்ந்ததே என்ற துன்பமும், தக்கன் 'உமையம்மை ಟ್ಲಿಯ 16 வநத ിജ്ഞഥ தர்ந்தது ಣು இமயம் இன்பமும், ஈசன்பால் உளள அனயும, மன்னுயிர்பால் வைத்த பெருங் கருணையும் முன்னே செல்ல, உமையம்மை கயிலை மாமலையை விட்டு விரைவில் இமயமலைக்கு எழுந்தருளி をリ。 சேர்தல் நீலமேகம் மின்னலோடு விளங்கும் நெடிய முடியை உடைய இமயமலை, மாயவன். திருமகளோடு பொருந்தி உறங்கும் பாற்கடலின் அனந்த சயனத்தை ஒத்தது. அத்தகைய மலையில் உள்ள அழகிய தடாகத்தில், மலையரசன். உமையம்மையை மகளாக அடையவும், அம் மங்கையை இணையற்ற ஈசனுக்கு மணம் செய்து கொடுக்கவும் கருதி, முன்னமே அருந்தவம் புரிந்துகொண்டிருந்தான். அங்ங்னம் மெய்த்தவம் இயற்றிய மலையரசன் கண்ணெதிரே தடாகத்தில் மலர்ந்த தாமரை மலரின் மேல், உலகெலாம் என்ற உமையாள், ஒரு பகங்குழந்தை வடிவத்திலே தோன்றினாள். அவ் வடி வத்தைக் கண்ட அரசன், "அடியேன் பொருட்டு என் அம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/10&oldid=919610" இலிருந்து மீள்விக்கப்பட்டது