பக்கம்:வேலின் வெற்றி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை - 3 ஆண்டவனை விட்டு நீங்கினாளோ!" என்று ஏங்கினான். "இத் தவத்தை ஏன் செய்தேன்?" என்று இரங்கினான்; எனினும், "இவையெல்லாம் ஈசன், திருவருள்” எனத் தெளிந்து, ஆனந்த்க் கடலுள் மூழ்கினான்; தாமரைத் தவிசில் அமர்ந்த குழந்தையைத் தன் தடக்கையால் எடுத்தான்; தலையின்மீது தாங்கினான்; விரைந்து சென்றான், மாளிகையை அடைந்தான்; மேனை என்னும் மனைவியின் கையிற் கொடுத்தான். மன்னுயிரையும், மாநிலத்தையும், மற்றும் உள்ள பொருள் அனைத்தையும் ஈன்று வளர்க்கும் அன்னையாகிய உமையாளையும் வளர்ப்பார் உண்டோ? மலையரசனும் அவன் மனையாளும் அவளை வளர்த்தன்ர் என்பது பொருளற்ற பேச்சே! அவர் மனையிலே வளர்ந்து, அம்மை தன் அருளின் தன்மையைப் புலப்படுத்தினாள் போலும்! - இவ்வாறு அவர்களிடம் வளர்ந்த உமையாள் ஐந்து வயது கழிந்தவுடன், பிரமன் முதலாய தேவர் - களுக்கும் பிதாவாகிய சிவபெருமானது ജു திருவருளைச் சிந்தித்துத் தவம் செய்யக் புரிதல் கருதினாள். தன் உள்ளக் கருத்தை மலையர சனிடம் உணர்த்தினாள். அன்னையின் கருத் தறிந்த அரசன், "அம்மா கேள். எம்மை விட்டு நீங்கி நீ அருந்தவம் புரிதற்கு இஃது ஏற்ற பருவமன்று. வயது ஐந்துதான் ஆயிற்று. தவத்தின் கடுமையை நின் திருமேனி தாங்காது. ஆதலால், இப்போது இக் கருத்தை விட்டுவிடு" என்று வேண்டினான். அது கேட்ட உமையவள் புன்னகை புரிந்து, "எல்லோரையும் காப்பவன் ஈசன் ஒருவனே. அவனன்றி யாரும் தம்மைக் காத்துக்கொள்ளல் இயலாது. இஃது உண்மை. இப்பொழுது நான் சொல்லிய செய்கையும் அப் பெருமானுடைய பேரருளேயாகும். ஆதலால், தடை சொல்ல. வேண்டா" என்று கூறினாள். உமையம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/11&oldid=919632" இலிருந்து மீள்விக்கப்பட்டது