பக்கம்:வேலின் வெற்றி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வேலின் வெற்றி அரசனும் அன்புடன் இசைந்தான்; இமயமலையின் ஒருசார் அரியதொரு தவச்சாலை அமைத்தான்; தன் உறவினர் தவம் செய்து அரிதிற் பெற்ற கன்னியர் பலரை அழைத்து, உமையாளுக்குத் துணையாக அனுப்பினான். நீலமணியின் நிறம் பொருந்திய உமையவள், மன்னன் தேவியிடம் விடைபெற்றுப் பணிப்பெண்கள் பலர் சூழ்ந்து வர, பரம்பொரு ளாகிய ஈசனை மனத்தில் அமைத்து, அச் சாலையிற் போந்து அருந்தவம் புரியலுற்றாள். - - திருக்கயில்ாய மலையில் சிவபெருமான் திருவடியிலே, அருந்தவச் செல்வராகிய சனகாதி முனிவர் " நால்வரும் அன்புடன் பன்முறை பணிந்து 2" எழுந்து நின்று, பண்னோடு வேத கீதம் இருத்தல் பாடித் துதித்து, "அருட் பெருங்கடல்ே: அகன்ற கருங்கடலின் நடுவே, நள்ளிரவில், சுழற் காற்றில் அகப்பட்டாற் போன்று, அடியுேம் பொருட் பெருங் கடலாகிய வேதத்தின் சாகைகளால் மலைப்புற்று, அஞ்ஞான இருளில் அகப்பட்டு அறிவு தளர்ந்தோம். மயக்கமாய பெருங்கடலி னின்றும் கரையேறும் முறையைத் திருவருள் புரிதல் வேண்டும்” என்றார்கள். குற்றமற்ற , நற்றவம் புரிந்து, செம்மையான அருளைப் பெற்ற நால்வரும் இவ்வாறு சொல்ல, அன்பர்க்கு எளியனாகிய அருள் வள்ளல் அம் முனிவர் முகம் நோக்கி, "உங்கள் அறிவு ஒருமைப்பட்டு அடங்கும்வண்ணம் அழிவற்ற பெருமை வாய்ந்த ஞானநூலை உணர்த்துகின்றோம்; அமர்க" என்று திருவாய் மலர்ந்தருளினார். ஈசன் ஞான நந்தி தேவர் தலைவாயிலைக் காவல் செய்திருந்தார். மெய்ஞ்ஞான முதல்வராகிய ஈசன் முன்னே, சனகன் முதலிய முனிவர்கள் தொழுது அமைந்தார்கள். அவர்களுக்கு முடிவற்ற சிவாகமத்தின் பாதங்களாகிய சரியை கிரியை யோகம் என்னும் மூன்றையும் சிவபெருமான் எடுத்தோதினார். அவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/12&oldid=919654" இலிருந்து மீள்விக்கப்பட்டது