பக்கம்:வேலின் வெற்றி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி.சேதுப்பிள்ளை 5 உணர்ந்த முனிவர்கள், "மனோல்யத்திற்குரிய ஞானபோதத் தையும் போதித்தல் வேண்டும்" என்று விண்ணப்பம் செய்தனர். அம் மொழி கேட்ட ஈசன் புன்னகை புரிந்தார்; மறுமொழி யொன்றும் உரைத்தாரல்லர்; ஞானநெறி, சொல்லிக் காட்டும் தன்மைத்தன்று என்று அம் முனிவர்க்கு உணர்த்துமாறு தமது திருமார்பில் ஒரு கரத்தை வைத்து, ஞான முத்திரை காட்டி, ஒரு கணப்பொழுது யாதொரு செயலும் இன்றி, யோகியரைப் போல் காட்சியளித்தார். ஞானத்தின் தன்மையை இவ்வாறு உணர்த்தக் கண்ட முனிவர்கள், "மெய்யறிவு என்பது நூல்களின் அளவிற் றன்று" என்னும் உண்மையை உணர்ந்தார்கள், ஈசன் அருளால் மன ஒடுக்கம் பெற்றார்கள். இங்ங்ணம் பிரமாவின் புதல்வர்கள் ஆகிய முனிவர்க்கு மெய்ஞ்ஞான போதம் கணப்பொழுது காட்டுங்கால் உலகமெல்லாம் ஒருமைப்பாடு உற்றது; காம உணர்ச்சி. அற்றது. எனவே, யார்க்கும் மூல காரணமாய் உள்ள முழுமுதற் பொருள் சிவபெருமானே என்று சொல்லவும் வேண்டுமோ? ஞானக் கண்ணால் ஈசனைக் கண்டு உணரும் மெய்ஞ்ஞானியர் போன்று, மண்ணகத்தில் உள்ள உயிர்களும், விண்ணகத்தில் உள்ள உயிர்களும், இன்னும் பாதலம் முதலிய ஏனைய உலகத்துள்ள உயிர்களும் சிற்றின்ப உணர்ச்சி அற்றிருந்தன. மாசற்ற காட்சியையுடைய மாதவ முனிவர்க்கு . . . மெய்யறிவுறுத்திய நிலையில், ஈசன் அழகிய இந்திரன் கயிலை மலையில் அமர்ந்தான். உமையவள் கவலை இமய மலையில் இருந்தாள். இந் நிலையில் கூாதல மாசற்ற மைந்தனை அன்னார் எங்ங்னம் அடைதல் கூடும்? என்று சிந்தித்து, இந்திரன் தன் மனத்திற் சஞ்சலம் உற்றான்; ஒன்றும் தோன்றாமையால் பிரமதேவனைத் துணைக்கொண்டு திருமாலிடம் போந்து தன் குறையை முறையிட்டான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/13&oldid=919675" இலிருந்து மீள்விக்கப்பட்டது