பக்கம்:வேலின் வெற்றி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. வேலின் வெற்றி யாளிமுகனுடைய படைத்தலைவனாகிய வீரசிங்கன் - . . வீரவாகுவைக் கண்டு பெருஞ்சேனையோடு இலக்கத்தில் எதிரே சென்று இன்றளவும் எம் கடிநகருள் எதிர்ப்பு வந்தார் யாரும் இலர் தன்னந் தனியனாய் வந்த நீ யார்? உயிர்மீது உனக்கு ஆசையில்லை போலும் நின்னைக் கொல்லு முன்னே நீ வந்த காரியத்தைச் சொல்" என்று வினவி னான். அது கேட்ட முருக தூதர் அவ் வசுரனுடைய கரங்களையும் தலையையும் வாளால் அறுத்துக் கடலில் எறிந்தார். பின்பு நெடிய வாளை உறையில் இட்டு வெற்றியோடு சென்றார்; இலங்கையின் மீது பாய்ந்தார். யாளிமுகனுடைய மைந்தனாகிய அதிவீரனும் மற்றைய அசுரரும் கலங்கி ஏங்கி, இடியோசை கேட்ட் நாகம் போல் உடல் நடுங்கி விழுந்தார்கள். விழுந்த அதிவீரன் உடனே எழுந்தான்; தன் சேனையாகிய பெருங்கடலின் நடுவே ஊழிக்கனல் கொழுந்துவிட்டு எரிந்தாற்போல நின்ற வீரவாகுவின் நிலையை நோக்கினான்; உடனே தனது வாளை எடுத்து, "இந்த வாள் அயனால் எனக்கு அளிக்க்ப்பட்டது. இதனை விலக்குதல் எவராலும் இயலாது; இன்று நீ மடிதல் திண்ணம். என் எதிரே வருவாயாக" என்று வீரமொழி பேசிக்கொண்டு நெருங்கினான். வீரவாகு அவனைப் பார்த்து, "நன்று நன்று நின் வலிமையும் வீரமும், நின்று வீரம் பேசுவதேன்? வந்து பார் வெற்றி வீரர் தம்மைத் தாமே மெச்சுவாரோ?" என்று கூறுதலும், அதிவீரன் சீற்றமுற்றான். இருவரும் எதிர்த்தனர்; பெரு மேகங்களில் மின்னல். எழுந்து வீசுதல் போல வீரர் இருவரும் வாள் வீசிப் போர் புரிந்தார்கள். அப்போது வீரவாகு தேவர் சமயம் பார்த்து. மாற்றானது அடியையும் முடியையும், மார்பையும் தோளையும் துணித்துத் தள்ளினார். காலன் அவன் உயிரைக் கவர்ந்து சென்றான். அதிவீரன் இறந்த பின்னர், வீரவாகு இலங்கையை விட்டு வீரமகேந்திரத்தில் எழுந்தார். பின்னும் ஆயிரம் Gur5667 துரம் வீரவாகு பறந்து வனவர் பகைவனாகிய சூரன் வாழந்த மகேந்திரபுரியின் முன்னே போந்தார். அந்நகரின் வடக்கு வாயிற் கோபுரத்தின் அருகே கோரன் அதிகோரன் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/102&oldid=919616" இலிருந்து மீள்விக்கப்பட்டது