பக்கம்:வேலின் வெற்றி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 95. கொடிய வீரர்கள் படையோடு காவல் செய்திருந்தனர். இவ் வழியாகச் சென்றால் இங்குள்ள சேனை எதிர்த்துப் போர் செய்யும். இதனைப் பொருது அழிப்பதற்குள் பொழுது போய்விடும் போர் முடிந்திடாது பின்பு வீரமாநகரில் உள்ள நால்வகைச் சேனை வெள்ளமும் எழுந்து வரும். எவராலும்.வெல்ல முடியாத சூரனும் பின்னர் வந்து எதிர்ப்பான்; அவனோடு பல நாள் போர் புரிந்தாலும் இறைவன் அளித்துள்ள வரத்தினால் அவன் இறக்கப் போவதில்லை. அடியேனுடைய ஆதி நாயகன், ஆறுமுக நாயகன், ஆசற்ற சேதிநாயகன் - அவனன்றிச் சூரனை யாவரே அழிக்க வல்லார்; ஆதலால், போர் புரிதல் ஏற்றதன்று; அன்றியும் எம்பெரு மான் இட்ட பணியும் அதுவன்று தூதர்க்கு அது முறையும் அன்று. ஆதலால், போர் இன்றி நகரின் உள்ளே புகுதலே முறை" என்று கருதினார், வீரவாகு. வடக்கு வாயிலின் வழியே செல்லாமல் தென்புறம் சென்று நாடக் கருதிப் புறப்பட்டார். அவ் வழியில் கப்பலைக் காக்கும் மீகாமனைப் போல் . . வானில் நின்று வீரமாநகரைக் காத்த வீரனாகிய கயமுகாசூரனைக - • . . . - - $ T கயமுகன் என்பவன், ஆகாய வழியே சென்ற கொல்லுதல் வீரவாகுவைக் கண்டு பேசலுற்றான்: "அடே நீ வலிய காவலைக் கடந்து வந்தாய் மாயம் புரிந்து புகுந்தாயோ? காற்றும் எமது ஆணை கடந்து வரும் ஆற்றல் உடையது அன்றே: உன்னை அனுப்பியவர் யார்? ஆலகாலத்தை அருந்திய அரனோ? மாலோ? அயனோ? வெள்ளை யானையுடைய கள்வனோ? இந் நகரத்தைச் சுற்றினாய் நீ ஒற்றனாக வந்தாய் போலும்! நீ வந்த காரியம் யாதோ? பேதாய் உன் உயிரை விற்றாய்! நீ இனிப் பிழைக்குமாறுண்டோ? இவ்வாறு முழங்கிக்கொண்டு கயமுகன் ஒரு குன்றத்தைப் பறித்தெடுத்து. "இஃது உன் உடலையும் உயிரையும் ஒழித்துவிடும்" என்று ஆரவாரித்து வீசினான். அவ் வசுரன் வீசி எறிந்த குன்றம் விசையற்று நிலைகுலைந்து விழுந்தது. அறநெறி தவறிச் சேர்த்த அரும்பொருளை அயலார் கொள்ளப் பறிகொடுத்து ஆக்கங்கெட்ட மாந்தரைப் போல் கயமுகன் திகைத்து நின்றான். தீப்பொறி பறக்கும் கண்களோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/103&oldid=919618" இலிருந்து மீள்விக்கப்பட்டது