பக்கம்:வேலின் வெற்றி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வேலின் வெற்றி பின்னும் அவ் வசுரன் வீரவாகுவின்மீது விட்டெறிவதற்கு வேறு மலைகளைப் பெயர்த்தெடுத்தான் அப்போது, முருகதூதர் தம் வாளை எடுத்து, அவனருகே போந்து, ஆயிரம் துதிக்கைகளையும் அறுத்தெறிந்தார். கரம் இழந்தும் உரம் இழவாது நின்ற கயமுகன் பின்னும் போர் புரிய முனைந்தான். அந் நிலையில் அவனை உதைத்துத் தள்ளினார், வீரவாகு. அலறி விழுந்தான், அசுரன்; ஆவி துறந்தான். அவன் மார்பினின்று பொங்கிப் பாய்ந்த குருதி அலைகடலை நோக்கிச் சென்றது. "அருமறைகளாலும் அறிய, வொண்ணாத முருகப்பெருமான் இட்ட பணியை மறந்து, பெருமையற்ற இவ் அசுரருடன் பேர் புரிந்து நிற்றல் பேதைமையாகும். ஆதலால், சூரன் நகரினுள்ளே இனி விரைந்து செல்வேன்" என்றார், வீரவாகு. சிறிய அணுவிலே சாலச் சிறிதாகியும், பெரிய பொருளிலே மிகப் பெரிதாகியும் எங்கும். நிறைந்து நிற்கும் அறுமுகச் செவ்வேள் திருவடியை அன்பொடு போற்றி, அப் பெருமான் அருளால் ஓர் அணுவின் உருவம் கொண்டார், முருகதூதர். சிவபெருமான் எல்லா உலகங்களையும், எழுவகையான உயிர்த்தொகைகளையும் மற்றுமுள்ள பிண்டப் பொருள்களையும் படைத்து ஓரிடத்தில் நிறைத்து வைத்த தன்மைபோல் விளங்கிய மகேந்திர மாநகரின் வளங்களைக் கண்டு வீரவாகு வியப்புற்றார். இந் நகரில் எழுகின்ற குழலின் ஒலியும், யாழின் ஒலியும், r பாட்டின் ஒலியும், விழாவின் ஒலியும் கடலொலியினும் நகத்தின் மிகுந்துள்ளது. வில் எடுத்துப் பயில்பவர் ஒருபால், " மற்றைய படைக்கலம் பயிலும் மறவர் ஒருபால்: மற்போர் பயிலும் மதுகையர் ஒருபால், மாயப்போர் பயில்பவர் ஒருபால், மந்திரம் முயல்பவர் ஒருபால்; ஆகப் பார்க்குமிட மெங்கும் வீரர்களே பரந்து தோன்றுகிறார்கள். நரம்பெழுந்த மேனியரும், ஊன் ஒடுங்கி உலர்ந்தவரும், நரைத்து வற்றிய தலையினரும், தண்டுன்றித் தள்ளாடித் திரிபவரும், கூற்றுவனால் குமைக்கப்படுவோரும், நோய்களால் நலிவோரும், வறுமையால் வாடுவோரும் இந் நகரில் எங்குமிலர்; இது தவத்தின் வலிமையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/104&oldid=919620" இலிருந்து மீள்விக்கப்பட்டது