பக்கம்:வேலின் வெற்றி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 97 யாகும். சிறந்த இந் நகரத்தின் செல்வத்திற்கு ஓர் அளவில்லை; இவ் வளத்தையெல்லாம் காண்பதற்கு எண்ணிறந்த கண்கள் வேண்டும்; அவற்றைப் பெற்றாலும் இக் காட்சியை ஒரு நாவால் உரைசெய்ய ஒண்ணாது. ஆயிரங்கோடி நாவினைப் பெற்றால் எடுத்துரைத்தல் கூடும். இவ்வாறு எண்ணி முருகதூதர் இமயமலை போன்ற கீழ்த்திசைக் கோபுரத்தின் மேல் நின்று, அந் நகரின் சில வளங்களைக் கண்டு, சூரன் இருந்த திருநகரினுள்ளே செல்லத் துணிந்தார். பின்னும் முருகப்பெருமானது திருவருளைத் துணைக்கொண்டு ஆகாய வழியாகச் சென்று, சூரனுடைய முதற் புதல்வனாகிய பானுகோபனது மாளிகையைப் பார்த்தார். பின்பு, அவன் மந்திரிகளுள் தலைமை பெற்று விளங்கிய தருமகோபனது மாளிகையின்மீது தங்கினார். அங்கிருந்து வானவரும் சயந்தனும் அசுரர் காவலிற் சிறையிருந்த சூழலைக் கண்ணுற்றார். தெய்வத் தன்மை வாய்ந்த தெள்ளிய மரகத மணியாற் செய்த - , அழகிய வடிவம் மாசடைந்தாற் போலவும், குளிர்ந்த జ్ఞ பொய்கையில் மலர்ந்த நீல மலர்களால் தொடுத்த மெல்லிய மாலை வாடியுலர்ந்தாற் போலவும் தோன்றினான், சயந்தன். ஐவகைப்பட்ட தேவதருவின் இனிய நிழலில் வாழ்ந்த வாழ்க்கையை நினைப்பான், அவன் மெல்லிய நறுமலர் விரித்த பூம்பள்ளியை நினைப்பான்; வான நங்கையர் நலத்தினை நினைப்பான், விண்ணாட்டுச் செல்வத்தை யெல்லாம் எண்ணி மயங்குவான். பொன்னகரம் பொரிந்து கரிந்ததையும், என்னை அசுரர் கொண்டுவந்து அருஞ் சிறையில் அடைத்ததையும் கேட்கும் பொழுது என்னைப் பெற்ற தாய் என்னென்ன நினைத்து ஏங்குவாளோ என்றெண்ணி வருந்துவான். 'அறம் என்னைத் துறந்ததோ? மறத்தின் கொடுமை நிறைந்ததோ? மாதவத்தின் பயன் தேய்ந்ததோ? நன்மை குறுகிற்றோ? தின்மை பெருகிற்றோ? மறையும் இறந்ததோ? இறைவனும் இல்லையோ? என்று மறுகுவான். எம்பெருமானே விலங்காகிய யானைக்கு விரைந்து அருள் செய்தாய்: கரிக்குருவிக்கும் நாரைக்கும் கருணை புரிந்தாய் ஊர்ந்து செல்லும் பாம்புக்கும் சிலந்திக்கும் பரிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/105&oldid=919623" இலிருந்து மீள்விக்கப்பட்டது