பக்கம்:வேலின் வெற்றி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 99 துயரத்தையும் உருக்கத்தையும் மயக்கத்தையும் உணர்ந்து இங்கு வந்தோம். உன் தந்தையாகிய இந்திரன் தனது குறையையும் தேவர் குறையையும் எம்மிடம் வந்து முறையிட்டான். அந் நிலையில் யாம் அளவிறந்த சேனையோடு இந் நிலவுலகிற் போந்து கிரவுஞ்சம் என்னும் மலையையும், தாரகாசூரனையும் அழித்தோம்; அதற்கும் பின்பு திருச்செந்தூரில் வந்து அமர்ந் தோம். பிரமதேவனும், திருமாலும், உன் தந்தையும் நம்மிடத்தில் உள்ளார். உன் தங்கை மகாமேரு மலையிலே உள்ளாள். நீ வருந்தாதே. இன்றைப் பொழுது கழிந்ததும் நாளையே செந்திலம் பதியை விட்டுப் புறப்பட்டு இங்கு வருவோம். இந் நகரின் அருகே தங்கி நின்று பத்து நாள்களில் அசுரரது பரந்த சேனையையும், அல்லல் விளைத்த சூரனையும் அழித்திடுவோம். பின்னர், உன்னையும் தேவரையும் கொடிய சிறையினின்றும் விடுவித்து உமது செல்வங்களையெல்லாம் தருவோம். ஆதலால் துயரம் தீர்க" என்று அருளி மறைந்தார் முருகவேள். அப் பெருமான் அருளிய மொழிகளைக் கேட்டான் சயந்தன், வாட்டம் தீர்ந்தான்; மகிழ்ச்சி யடைந்தான், மெய்ம்மயிர் சிலிர்த்தான்; கண்ணி வடித்தான்; நஞ்சு தலைக்கேறிச் சாய்ந்தவர் மந்திரத் திறனால் மயக்கம் தீர்ந்தாற் போன்று எழுந்தான். ஆதி நாயகனாகிய ஆறுமுகப் பெருமான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நீர்மையையும், அருள்புரியும் தன்மையையும் நினைந்து, அவர் திருவடிகளை மறைகளாற் போற்றித் தொழுதுகொண்டு இருந்தான். இவ் வண்ணம் வானவரோடு சயந்தன் சிறையிருத் தலையும், அசுரர்கள் செறிந்து சிறைக்கோட்டத்தைக் முருக தூதர் காவல் செய்திருத்தலையும் வித்தகராகிய வீரவாகு கயந்தனைக் கண்டார். கருணையின்றிக் கடுஞ்சிறையைக் காத்து காணுதல் நின்ற அசுரர் காணாது மயக்கமுற்றுக் கிடக்கவும், வானவர் காணவும் ஒரு வகை செய்யக் கருதினர். மூல மந்திரத்தின் பொருளாய், உயிர்க்குயிராய் நின்று நிலவும் குமரேசனை நினைத்தார்; அவர்க்குரிய மந்திரமாகிய ஆறெழுத்தை அன்புடன் ஒதினார்; தீமையே உருவாகி நின்ற அசுரரது சிறைச் சாலையினுள்ளே புகுந்தார். அப் பொழுது புகை நிறம் பொருந்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/107&oldid=919626" இலிருந்து மீள்விக்கப்பட்டது