பக்கம்:வேலின் வெற்றி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+03 வேலின்_வெற்றி அசுரர் வலிமையற்று மந்திர வலையிற்பட்டு மயக்கமுற்றார். அந்த வேளையில் வீரவாகு சிறைக்களத்தினுள்ளே சென்று வேலேந்திய முருகப்பெருமானது திருநாமத்தைச் சொல்லித் துதித்தார். பொன்னுலகத்தை யாளும் பீடிழந்த சயந்தன் முன்னே போந்து அமர்ந்தார். வியப்புற்று நின்ற சயந்தனை நோக்கி, ‘ஐயனே கேள்: . முதல்வன் பெற்ற முருகவேளின் பின்னவன் ఇఙ1), ரன். அவன்தன் தூதனாய் வந்தடைந்தேன். 领 ), வீரவாகு என்னும் பெயருடையேன். உங்களைச் எடுத்துரைத்தல் சிறையினின்று விடுவிக்கும்படி சூரனிடம் சொல்ல வந்தேன். சிவபெருமான் வேண்டிக்கொண்டமையால் பிரம தேவனைச் சிறையினின்றும் விடுவிக்க அறுமுக வள்ளல் உங்களிடம் நிறைந்த கருணை பாலித்தார். அவரருள் முன்னிற்கும் பொழுது உம்முடைய பாவமும் பழியும், தீமையும் துன்பமும், பிற குறைகளும் அழிந்தொழிதல் அரிதாகுமோ? பிறவியாகிய பெருங் கடலையும் கடந்தீரன்றோ? ஒப்புயர்வற்றதாய், அரிய பேரொளியாய், அப்பாலுக்கப்பாலாய் நின்ற பரம்பொருளே ஆறு முகமும் பன்னிரு தோளும் கொண்டு, பாலகன் போலத் தோன்றி, கந்தன் என்றொரு பேரும் பெற்று எல்லோரும் காணக் காட்சி தருகின்றார். ஏழு கடலும், எண்ணிறந்த மலையும் ஏனைய பொருளும் கொண்ட நிலவுலகத்தையும், மேலும் கீழுமாய் நின்ற பதினான்கு உலகங்களையும், மற்றுமுள்ள அண்டங்கள் அனைத்தையும் நொடிப் பொழுதில் உண்டு ஒழிக்க வல்லது முருகன் கைவேல்; சூரனையும் அசுர குலத்தையும் வீட்டுவது அதற்கு ஒரு விளையாட்டேயாகும்" என்று இன்னோரன்ன செய்திகளை இந்திரன் மைந்தனும் இமையவரும் உணரத்தக்க வகையில் வீரவாகு எடுத்துரைத்தார். அந் நிலையில் அன்னார் மனமகிழ்ந்து, வேலனுக்கு இளைய வீரா நீ வெற்றி பெற்றிடுக! என்று தனித்தனியாக ஆசி கூறினர். - சிறைக்களம் விட்டு நீங்கினார், முருக தூதர்; வானின் வழியே விரைந்து சென்றார். சூரன் நகரத்தைச் சூழ்ந்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/108&oldid=919628" இலிருந்து மீள்விக்கப்பட்டது