பக்கம்:வேலின் வெற்றி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யும், விலங்குகளும் செய்யும்; ஆதலால், இதை வியப்பவர் இங்கு யாரும் இலர், அது நிற்க. இங்குத் துணிந்து வந்த நீ யாவன்? இந்திரன் ஒடி ஒளித்தான். ஏனையோர் இவ்வாறு செய்யார். திருமால் இதனை மனத்திலும் நினையான். பிரமன் ஆசி கூறித் திரிகின்றான். எல்லார்க்கும் மேலாய இறைவன் என்னிடம் எளிதாக வரமாட்டான் ஆதலால், நீ யாவன்?" என்று வினவி னான், சூரன். - அது கேட்ட வீரவாகு, "அசுரனே, இந்திரன் துயரத்தை நீக்கி, பிரமன் முதலிய வானவர் சிறுமையைப் போக்கி, - தேவரைச் சிறையினின்றும் விடுவித்து, அவர்க்குப் _్క சிறப்பை யெல்லாம் அளிக்குமாறு ஆதி அறிவித்தல் " * + S SAASSSS S S H S S S முதல்வனாகிய ஐயன் திருச்செந்தூரில் எழுந்தருளி யுள்ளார். அந்த ஆண்டவனுக்கு அடிமை செய்பவன் நான். தாரகன் என்னும் பெயர் கொண்ட நின் தம்பியையும், கிரவுஞ்சம் என்னும் பெரிய மலையையும் நொடிப்பொழுதிலே கொன்றொழித்த கொற்ற வேல் தாங்கிய குமரவேள், உன்னிடம் பெருங்கருணை கொண்டு என்னைத் தூதனுப்பினார். "வானவர்க்குத் தந்தை முறையில் உள்ளவர், காசிய முனிவர். வீரவாகு அவர் மைந்தனாகிய நீ வானவரைச் சிறை செய்தல் இ. முறையோ? நீ வேத நூல் முறையினின்றும் தவறி னாய்! அற்பப் பொருள்களில் ஆசை வைத்தாய்! நீதி முறையில் உலகத்தைக் காப்பதன்றோ அரசற்குரிய நெறி? அளவிறந்த காலம் நீ அருந்தவம் முயன்றாய்? வேள்வித் தீயில் மூழ்கிய உனக்கு எம்பெருமான் அளித்த அழியாத ஆயுளையும், செல்வத்தையும் வீணாகத் தவறான நெறியிலே சென்று கெடுத்துக் கொள்ளுதல் தகுமோ? அளவிறந்த செல்வத்துடன் நீயும் நின் சுற்றத்தாரும் வாழவேண்டுமானால் வானவரைச் சிறையினின்றும் விட்டுவிடு அற நெறியிலே அரசு புரிந்திடு அவ்வாறு செய்யா தொழிந்தால் குமரவேள் இங்கு எழுந்தருளி உன்னையும் உன்னைச் சார்ந்தோரையும் கொன்றழித்தல் திண்ணம்" என்று உறுதியாகக் கூறினார், முருகதுதர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/110&oldid=919634" இலிருந்து மீள்விக்கப்பட்டது