பக்கம்:வேலின் வெற்றி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை j G3 இவ் வாசகத்தைக் கேட்ட போது சூரன் மனத்தில் - - > ற் பறக்கும் கண்ணும், புகை வீசும் பேசி மறுத்தல் மூச்சும் உடையவனாய், கையொடு கையறைந்து, கடுமையாகப் பேசுவானாயினான். "அண்டங்கள் ஆயிரத்தெட்டும் வென்று இணையற்ற தனியரசு புரிந்திடும் எனக்குப் பல் முளையாத பாலனா - மழலை மொழி பேசும் குழவியா - புத்தி சொல்லத் தலைப்பட்டான். அசுரர் குலத்தை வானவர் வருத்தினர். அவர்களை வறியவராக்கினர். ஆதலால், நான் தேவரது செல்வத்தை ஒழித்தேன். அவரைக் குற்றேவல் கொண்டேன்; அவர்தம் பழக்கவழக்கங்களைக் கெடுத்தேன்; சிறைக் கோட்டத்தில் அவரை அட்ைத்தேன். எம் குலமுறைப்படி இவற்றையெல்லாம் செய்தேன். தப்பித் தலைமறைந்து திரியும் இந்திரன் முதலி யோரையும் பற்றிக் கொணர்ந்து இங்கே சிறைவைக்கக் கருதியுள் ளேன். அப்படியிருக்க என் கையில் அகப்பட்ட வானவரை விடுவேனோ? விடவே மாட்டேன் ஒப்பற்ற வீர சூரன் என்னும் பெயருடையோன் நான் அழியாத வச்சிரதேகமும், மற்றைய வரங்களும் முன்னமே எனக்கு முருகன் தந்தையார் முறையாக அளித்துள்ளார். அவற்றை யாவரே மாற்ற வல்லார்? போர் புரிந்து என்னை யாவரே வெல்ல வல்லார்? பலபல சொல்வானேன்; நான் வானவரை விடமாட்டேன்; நீ பேதையாதலால் அறியாப் பிள்ளையின் சொல்லைக் கேட்டு இங்குத் தூதனாக வந்தாய்! உனக்கு உயிர்ப்பிச்சை தந்தேன் பிழைத்துப்போ என்றான், சூரன். அவன் சொல்லிய மொழிகளைக் கேட்ட போது முருக தூதனது உள்ளத்தில் சீற்றம் முறுகி எழுந்தது. மெய்ம்மயிர் வீரவாகு சிலிர்த்தது. சிரிப்புப் பிறந்தது, கண் சிவந்தது. அந் மீண்டும் நிலையில் பேசலுற்றார். "நெடுமாலும், நான்முகனும் கட்டுரை நெடுங்காலம் தேடியும் காண ஒண்ணாத இறைவனது கூறுதல் நெற்றிக் கண்களில் பரஞ்சுடர் உருவாய், கருணை நிறைந்த எம்பெருமான் தோன்றினார். முன்னவர்க்கும் முதல்வருக்கும் முற்பட்ட ஆதி முதல்வராய், தன்னேரில்லாத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/111&oldid=919636" இலிருந்து மீள்விக்கப்பட்டது