பக்கம்:வேலின் வெற்றி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 1435 உடனே வல்லவர் ஆயிரவர் வீரவாகுவை வளைத்தனர். அந் நிலையில் அவர் ஆசனத்தை விட்டு எழுந்தார்; ಎಣಣ್ಣೆ ** * தூதன் மடித்தல் :) ) ೨೩557 Gu பொழுதில் அவர் உயிரைக் குடித்தார். பின்பு சூரனை நோக்கி, "என் ஆண்டவனது நெடுவேலால் நீ மாண்டு ஒழிவாய்! அதுவரையும் ஐம்புலன்களாலும் அனுபவிக்கத்தக்க இன்பங்களை யெல்லாம் ஆரத் துய்த்துக்கொண்டு இரு நான் போய் வருகின்றேன்" என்று புறப்பட்டார்; சிங்கம் போன்ற வீரன் இவ்வாறு சொல்லிச் சென்றபோது, அவர் தங்கியிருந்த அரியாசனமும், மேலே எழுந்து வானத்திற்சென்று மாயைபோல் மறைந்தது. சூரன் விடுத்த ஆயிரம் அசுரர்களையும் அடர்த்து அவைக்களத்தை விட்டு அகன்றார், வீரவாகு. நெருப்பை உமிழ்கின்ற கண்களால் அதைக் கண்டான், சூரன். அருகே நின்ற நூறு முகம் படைத்த சதமுகன் என்னும் அசுரனை நோக்கிப் பேசலுற்றான். "தூதுவனாய் வந்த இவன் நமது அணுக்கப் படையை அடித்துச் சென்றான்; செய்யத் தகாத காரியத்தைச் செய்தானாயினும் இவன் இங்கு வந்த தூதன் ஆதலால், கொடும்போர் புரிந்து இவனைக் கொல்லுதல் பழியாகும். இவன் வீரத்தையடக்கி விரைவிற் பிடித்துக்கொண்டு வருக என்றான். அப் பணி தலைமேற்கொண்ட சதமுகன் நூறாயிரம் வீரரோடும். எண்ணிறந்த படைக்கலங்களோடும் வேகமாகப் புறப்பட்டு முருகதுதனை யடைந்து வீரமொழி பேசினான்; நெருங்கிச் சென்று பற்றினான். பிடித்த அசுரனை ஒரு தோளால் இடித்துத் தள்ளினர், வீரவாகு மண்ணில் விழுந்தவன் உன்னி எழுந்தான். மீண்டும் முருகதுதர் அவனைக் காலால் உதைத்தார், இடியோசை கேட்ட நாகம்போல் துடித்து விழுந்த அசுரன் வாய் வழியே குருதி பொங்க மிதித்தார்; நூறு தலைகளையும் நொடிப் பொழுதில் துவைத்து அவன் உயிரை முடித்தார். பின்னர், அளவிறந்த சீற்றம் கொண்டு, ஆறுமுகப் பெருமான் கருணையாற் சொல்லி யனுப்பிய கட்டுரையை மதியாது இகழ்ந்த சூரனது அத்தாணி மண்டபத்தை நொறுக்கிப் பின்பு இந் நகரத்தையும் எரிப்பேன் என்றெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/113&oldid=919640" இலிருந்து மீள்விக்கப்பட்டது