பக்கம்:வேலின் வெற்றி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 வேலின் வெற்றி ணினார், வேற்படை தாங்கிய குமரேசனது திருவடியை நினைத் தார்; அப் பெருமான் அருளால் உலகளந்த திருமால்போல் நெடிய தோர் உருவம் கொண்டு நின்றார். எம்பெருமான் தூதுவராகிய வீரவாகுவின் பெருந் திருவடி சூரனது வினை நோக்கிக் கலக்க முற்ற ஆதரர் ഷണങ്ങഖത്രി அத்தாணி கடுகி ஓடினார். ஆழிவற்ற மதில்களை Այ65)ւ-Այ மன்ட்த்தை அரண்மனையினுள்ளே துத்து நின்றார் ஐம்பது அழித்தல் வெள்ளம் அசுரர்கள் இருள்போன்ற மேனியர் f கனல் சொரியும் கண்ணினர்; அன்னார் முருக துதரொடு போர் புரியப் புகைந்தெழுந்தனர். அவர்களோடு போர் புரிய முற்பட்ட முருகதூதர் பெருத்தார், சிறுத்தார்; பல வடிவம் தரித்தார்; ஒவ்வொருவரையும் தொடர்ந்து நடந்தார்; காற்றுப்போல் சுழன்றார்; வளைந்தார்; எழுந்தார் ஐம்பது வெள்ளத்தையும் கலக்கி அழித்தார். பின்னர், ஐந்நூறு யோசனை அகலமும், ஆயிரம் யோசனை உயரமும் உள்ளதாய், பொன்னொளி வீசும் மேரு மலைபோல் பன்னெடும் சிகரங்களையுடையதாய் நின்ற வேரம் ஒன்று அங்கு விளங்கக் கண்டார். அரண்மனையின் எதிரே அழகிய பொன் னொளி வீசி நின்ற அவ் வேரத்தைப் பறித்து ஒரு கரத்தில் எடுத் தார், அறம் திறம்பிய அசுர மன்னன் வீற்றிருந்த அத்தாணி மண்ட பத்தின்மீது அதனை வீசி எறிந்தார். அம் மண்டபம் இடிந்து விழுந்தது. அங்கெழுந்த தூசி விண்ணும் மண்ணும் பரந்தது; எட்டுத் திக்கிலும் செறிந்தது; அசுரக் கூட்டம் உடைந்து கலைந்தது; இவற்றைக் கண்ணுற்றான், அறிவிழந்த சூரன். ஆயிரம் பெயருடைய இறைவனுக்கு நிகரான ஆற்றல் துதுவனைப் படைத்த முருக துதனைக் கண்டு ஊழித் தீப்போல் பிடித்துவரப் உள்ளம் கொதித்தான், சூரன். பலபல தோள்களும் н : இ. முகமும் படைத்த ஆயிரம் அசுரரை நோக்கி இடி போல் வெடுவெடென முழங்கினான். "தூதனைக் கொல்லுதல் கொற்றமன்று. அவனை எதிர்த்துப் போர் புரிந்தேனும் பற்றுக. தப்பிப் போகாமல் இங்குக் கொண்டுவந்திடுக. அவன் மேனியை வடுப்படுத்தி வானவரோடு வன்சிறையில் வைப்பேன்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/114&oldid=919642" இலிருந்து மீள்விக்கப்பட்டது