பக்கம்:வேலின் வெற்றி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்க். ரா. பி. சேதுப்பிள்ளை * என்றான். அலைகடலில் எழுந்த ஆலகாலம் போன்ற மேனிடி ஊழித் தீயின் கொழுந்து போன்ற சிகையும் உடைய அசுரர்க பெரிய வீரவாகுவின்மீது அம்பு தொடுத்தார்கள்; கூரிய வேல்க.ை விடுத்தார்கள், இரும்புத் தடிகளை எறிந்தார்கள், நச்சுப் படைகளை விசினார்கள்; சூலப் படையையும் வச்சிரப் படையையும் நேமி படையையும் விட்டார்கள். இவ் வண்ணம் கடும்போர் திகழு. பொழுது இணையற்ற முருக துதர் சிறிது நேரத்தில், ஆயிரம் தோளுடைய வீரர் (சகத்திர வாகுகள்) அனைவரையும் ஒரு மராமரத்தால் சிதைத்து நொறுக்கித் தனியராய் அமர்க்களத்தில் நின்றார். அதையறிந்த சூரன், "சரி, சரி, உமையவள் பெற்ற பாலன் விடுத்த துதன் ஒருவன், எம் முன் வந்து ஏளனம் செய்தான்; புறத்தே போந்து போரில் எதிர்த்தவரையெல்லாம் அழித்தான் இன்னும் போகாமல் நிற்கிறான், நமது வீரம் அழகுதான் என்று நகைத்தான். மூன்றுலகும் புகழ் பெற்ற சூரன் சீற்றத்தைக் கண்டு தரியாத வச்சிரவாகு என்னும் மைந்தன் கிளர்ந்து எழுந்தான் பத்துத் தலையும் வச்சிரமேனியும் வாய்ந்த அம் மைந்தன் மன்னன் அடிபணிந்து, "ஐயனே அற்பத் துதுவன் பொருட்டு இப்படி வருந்தலாமோ? நொடிப்பொழுதில் நான் சென்று அன்னான் வலிமையை அழித்து அவனைப் பிடித்து வந்து உம் முன்னே விடுவேன் என்றான். அப்போது சூரன் மைந்தனை நோக்கி மகிழ்ந்தான், "அப்படியே செய்க" எனப் பணித்தான். மாலையணிந்த வச்சிரவாகு தன் சேனையோடு போர்க்களம் புகுந்தான்; அவனைப் பார்த்தபோது முருக தூதர், இவன் இந்திர ஞாலத் தேருடைய சூரன் அல்லன், அவன் மைந்தருள் ஒருவன்போலும். இவனைச் சேன்ையோடு சிதைத்து அழித்து, அந்திமாலை வந்தெய்து முன்னமே, எம்பெருமான் திருவடியை வணங்கச் செல்வேன்' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். அவ் வேளையில் வச்சிரவாகுவின் உடன்வந்த பெருங்குல மைந்தரும், பரந்த நாற்படையும் முருக துதனை வளைந்து படைக்கலம் தொடுத்துப் போர் விளைத்தார்கள். வல்லவனாகிய வச்சிரவாகு தன் வில்லை வளைத்து, நானொலி எழுப்பி, ஆயிரம் அம்புகளைப் பூட்டி முருகது.தன்மேல் விடுத்தான் அவன் எடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/115&oldid=919644" இலிருந்து மீள்விக்கப்பட்டது