பக்கம்:வேலின் வெற்றி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

警莎3 வேலின் வெற்றி வில்லைப் பிடித்து முரித்தார், வீரவாகு. அது கண்ட குத் மைந்தன், வாளெடுத்துப் போர் செய்யத் தொடங்கினான். அப்போது வீரவாகுவும் தமது வாளெடுத்து எதிரே சென்றார். ଔରi வீசிய வாள் அசுரனது பத்துத் தலையையும் அறுத்துத் தள்ளிந்து அந் நிலையில் அவன் இறந்து பட்டான். பின்பு ப்ோர் செய்ய வருவன் எவருமிலர். பகலவன் மேற்றிசையில் மூழ்கினான். அந்தி மாலையும் வந்து சேர்ந்தது. மகேந்திர நகரை விட்டு நீங்கினம் முருக தூதர் ஆகாய வழியே விரைந்து எழுந்து, முருகன் கருணை யைப் போற்றி வடதிசையிலுள்ள இலங்கையின் அருகே அவர் வருவதைக் கண்டான், யாளிமுகன். அவன் வாட்பேர் _, வீரன்; முன்னே முருக தூதர் கையால் இறந்த அதிவீரனைப் பெற்ற தந்தை அவன் வீரவாகுவை " நோக்கிக் கொதிப்புற்றான். "இவன் முன்னொரு முறை என் காவலில் அமைந்த இந் நகரத்தைக் கடந்தான்; என் மகனுயிரைக் கவர்ந்தான், மகேந்திரம் சென்று மீண்டு வருகின்றான். இக் கள்வனைக் கொன்று ஒழிப்பேன் என்றான். இவ்வாறு உள்ளத்திலே கறுவிக்கொண்டு யாளிமுகன் முருகது.தரின் அருகே சென்றான்; தன் ஆயிரம் கைகளாலும் அவரை அறைந்தான். அடித்த கைகளை அவர் ஒரு கையாற் பிடித்தார், அவற்றை வாளால் அறுத்தெறிந்தார். அப்போது அசுரன் பெருங்கூச்சல் இட்டான், வீரவாகுவைப் பிடிப்பதற்குத் தன் துதிக்கைகளை யெல்லாம் விரைவாக நீட்டினான். அவன் பெற்ற ஆயிரந் தலைகளும் அற்று வீழுமாறு முருகதூதர் தம் ஒப்பற்ற வாளை வீசினார்; உயிரைப் போக்கினார். பெருஞ் செல்வத்தையுடைய இலங்கையை விட்டு நீங்கி, முருக. கருங்கடல் கடந்து, கந்தமாதன மலையைச் சேர்ந்த பெரும்ானிடம் திருச்செந்துரை வந்து அடைந்தார், வீரவாகு w அன்பினால் என்பும் மனமும் உருக, கண்களில் . திகதி ஆனந்த வெள்ளம் பெருக, மெய்தானரும்பி உரைத்தல் விதிர்விதிர்க்க, முருக வள்ளலின் சேவடியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/116&oldid=919646" இலிருந்து மீள்விக்கப்பட்டது