பக்கம்:வேலின் வெற்றி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை * {}9 வனங்கி, "ஐயனே தேவரீர் பணித்தருளிய மொழியைச் சூரன் முன்னே சென்று சொன்னேன். வானவரைச் சிறையினின்று விடுவித்தல் முறை என்று அவன் கருதினானில்லை; வானவர் குலத்தை விடமாட்டேன் என வெகுண்டு கூறினான். அடியேன் அவ்விடம் விட்டு நீங்கி இங்கு விரைந்து வந்தடைந்தேன். இதுவே நடந்த செயல்" என்றார். அப்போது எங்கும் நிறைந்து, எல்லாம் அறியும் தன்மை வாய்ந்த முருகன், "அன்பனே! நீ செய்ததொன்றும் சொல்லவில்லையே! அதைச் சொல்" என்று பணித்தருளினார். "எம்பெருமானே! சூரன் நகரத்திற்குத் துது செல்லும் போதும், திரும்பி வரும் போதும் என்னைத் தடுத்தோரை யெல்லாம் உமது திருவடித் திறத்தால் முடித்துவிட்டேன். நடந்தது. இதுவே" என்று கூறினார், வீரவாகு. "சாதலே அவன் விதி. ஆதலால், தேவரைச் சிறைவிடேன், என்றான், சூரன். அவன் செருக்கையழிக்க நாளையே செல்வோம்" என்று அறுமுகப் பெருமான் கூறக் கேட்ட பொழுது அங்கிருந்தோர் எல்லாம் நம் துயர் ஒழிந்தது என்று மகிழ்வுற்றார். முருக தூதனால் அழிந்த நகரத்தைச் செப்பனிடும் புதுக்கி பொருட்டுச் சூரன் சேவகர்கள் மற்றோர் அண்டத் அமைத்த தில் இருந்த பிரமதேவனைக் கொணர்ந்து நகரில் சூரன் மன்னன் முன்னே நிறுத்தினார்கள். சூரன் அமர்த் அவனைப் பார்த்து "சீ அழிந்த இத் திருநகரை - முன்போல ஆக்கித் தரல் வேண்டும்” எனப் பணித்தான். பொன்மதிலும், மாட வீதிகளும், கூட கோபுரங்களும், வேரமும், பூஞ்சோலைகளும், மண்டபங்களும், தடாகங்களும், வானளாவிய மேடைகளும், மன்றங்களும், பிறவும் முன்னிருந்த வண்ணமே படைத்தான் பிரமன். புதிதாக அமைந்த நகரத்தையும் மாளிகையையும் நோக்கினான் சூரன். படைத்தவன் கைவண்ணம் கண்டு மகிழ்ந்து பாராட்டினான்; முன் போலவே அசுரர் போற்ற அரியாசனத்தில் அமர்ந்தான். முந்நீர்க் கடல் கடந்து செந்திற். பதியிற் பாசறை கொண்ட கந்தன் படைத்திறமும் பிறவும் உணர்ந்து வந்த ஒற்றர்கள் அந்த வேளையில் அவன் முன்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/117&oldid=919648" இலிருந்து மீள்விக்கப்பட்டது