பக்கம்:வேலின் வெற்றி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鳍狩 வேலின் வ்ெற்றி போந்து வணங்கி, “அரசே தாரக வீரனைக் கொன்று, மாயா கிரியாகிய கிரவுஞ்ச மலையை வேற்படையால் இரு கூறாகப் பிளந்து ஒழித்து, கடற்கரையில் உள்ள செந்தியம்பதியில் முருகன் வந்துள்ளான். இஃது உண்மை. வேலேந்திய அப் பாலன் பொங்கி யெழுகின்ற பூதகணங்களோடும், வெம்படை தாங்கிய வீரர் களோடும் கடல் கடந்து இங்கு வந்து போர் புரியக் கருதியுள்ளான். இதில் ஐயம் கொள்ள வேண்டா. ஆவன அறிந்து செய்க" என்று கூறினார். அம் மொழி. கேட்ட மன்னன், ஒப்பற்ற தம்பியாகிய சிங்க முகனையும் அறிவறிந்த அமைச்சரையும், பர்னுகோபன் முதலிய மைந்தரையும், உற்ற துணையாய சுற்றத்தாரையும், சேனைப் பெருந்தலைவரையும், ஒரு கணப் பொழுதில் வரவழைத்தான். அவர்கள் வந்து மன்னன் அடி பன்னிந்தனர்; சூரன் உள்ளத்தில் , நெருப்புப் போன்ற சீற்றம் நிறைந்து எழுந்தது. ఆజ్ఞి பெருமூச்செறிந்து பேசுவானோயினான்; "இத்திரு நகர் அழிந்தது; அளவிறந்த சேனை இறந்தது; எங்கும் எலும்பு குவிந்தது, மாநிலம் கிழிந்தது; குருதியாறு பெரு கிற்று என் ஆணை ஒழிந்தது; சீமையும் சிதைந்தது. தூதனாக வந்த ஒருவனைப் பிடித்துச் சிறையில் அடைத்து வைத்தேன் அல்லேன்; முடித்தேன் அல்லேன்; வடுப்படுத்தினேன் அல்லேன்; எல்லையற்ற வசைக்கு ஆளாயினேன். மேலும், நீலகண்டன் தந்த பாலகன் கடல் கடந்து இங்கு வந்து நம்மோடு போர் நிகழ்த்தக் கருதினானாம். அதனை இவ் வொற்றர் வாயிலாக அறிந்தேன். ஆதலால், நாம் செய்யத் தக்கதென்ன என்று உங்களைக் கேட்கின்றேன். உரைப்பீராக” என்று மன்னன் கூறினான். அது கேட்டு அமைச்சருள் ஒருவனான மேதியன், அரசனை வணங்கி, "ஐயனே மாயம் புரிய வல்ல மலையையும், திருமாலை வென்ற உம், வீரத்தம்பியையும் நொடிப் பொழுதில் அழித்த வீரனைப் பாலன் என்று பேசுதல் அறிவாகுமோ? ஒப்புற்ற தம்பி யும் மலையும் அழிந்தபோதே, சிவகுமாரன்மீது செல்லாதிருந்தீர்! சேனையையேனும் அனுப்பி அவனை வெல்லாதிருந்தீர்! இத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/118&oldid=919650" இலிருந்து மீள்விக்கப்பட்டது